ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் தற்பொழுது பர்ஹானா என்று திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் இஸ்லாமிய பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே புர்கா, கேரளா ஸ்டோரி போன்ற திரைப்படங்கள் இதே போல் இஸ்லாமியர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு தற்பொழுது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த சமயத்தில் மீண்டும் இந்த வரிசையில் வெளியாக இருக்கும் இந்த பர்ஹானா திரைப்படம் எப்படி இருக்க போகிறதோ என்று கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன் ,சொப்பன சுந்தரி அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்திருக்கும் இந்த பர்கானா திரைப்படம் எப்படி அமையப் போகிறது என்ற கேள்வியில் இருக்கும் ரசிகர்களுக்கு நேற்று நடந்த பர்கானா திரைப்படத்தின் பிரீ ரிலீசிங் போது இந்த திரைப்படம் இஸ்லாமியர்களும் கொண்டாட கூடிய வகையில் அமைந்திருக்கும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியது சற்று தெம்பாக இருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ஜித்தன் ரமேஷ் ஐஸ்வர்யா , செல்வராகவன் ஆகியோ ர் நடித்திருக்கிறார்கள். இதில் நேற்று நடைபெற்ற இந்த பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜித்தன் ரமேஷை பார்த்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ஜித்தன் ரமேஷினுடைய கதாபாத்திரத்தை பார்த்தால் எல்லா பெண்களும் இது போன்ற கணவரை வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் என்று கூறியதோடு விடாமல் உங்களுக்கு எத்தனை மனைவி என்று கேட்கும் கலாய்த்து இருக்கிறார். இது இந்த செய்தி தற்பொழுது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
அவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் பிறரை இப்படி பொது இடத்தில் கலாய்ப்பது நாகரீகம் மற்றும் செயல் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள். இந்த காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது இதன் மூலம் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ஐஸ்வர்யா ராஜேஷ் என் மீது ஒரு தப்பான அபிப்ராயம் தற்பொழுது தோன்றியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்தில் இவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தை பொறுத்து தான் மீண்டும் இவருக்கு நல்ல பெயர் கிடைக்கவே கிடைக்குமா இல்லையா என்பதை பார்க்க முடிகிறது.