Friday, May 16, 2025
- Advertisement -
Homeசினிமா“செங்கல் சூளையில் நடிகர் சாந்தனு செய்த சம்பவம்” - சாந்தனுவின் பதில் என்ன ?

“செங்கல் சூளையில் நடிகர் சாந்தனு செய்த சம்பவம்” – சாந்தனுவின் பதில் என்ன ?

வேட்டியை மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் துறைகளில் அறிமுகமானவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் வெளியான சக்கரகட்டி மற்றும் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படங்கள் இவரைப் பற்றி நாம் அனைவரையும் பேச வைக்கும் திரைப்படங்கள் ஆகும்..

- Advertisement -

ஒரு பிரபலமான நடிகரின் ஆதரவையும், முன்னணி நடிகராக வெற்றிகரமான அறிமுகத்தையும் பெற்றிருந்தாலும், சாந்தனுவால் தமிழ் சினிமாவில் தனது தந்தைக்கு சமமான வெற்றியை அடைய முடியவில்லை. இருப்பினும், அவர் தொடர்ந்து கடினமாக உழைத்து, பல ஆண்டுகளாக பல படங்களில் நடித்தார்.

இவர் தமிழில் கடைசியாக மாஸ்டர் திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெற்றி பெற்றாலும் இவருக்கான ஒரு அங்கீகாரத்தை இந்த தமிழ் திரை உலகில் அந்த படம் இவருக்கு வழங்கவில்லை. இந்த படம் குறித்து அவர் வருத்தமும் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் சாந்தனு நடிப்பில், அடுத்து வெளியாக இருக்கும் ராவண கோட்டம் திரைப்படம் பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த திரைப்படம் வருகின்ற மே 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் 1950 களில் நடைபெற்ற சாதிய வலிகளை தழுவி எடுக்கப்பட்ட உண்மை கதை கொண்ட திரைக்களம் என்று இதை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தின் ப்ரோமோசன்கள் இறுதி கட்ட நிலையை எட்டியுள்ளது.இந்த நிலையில் ட்விட்டரில் மூவிஸ் பப் என்ற வலைப்பக்கத்தில் ராவண கூட்டம் திரைப்படம் பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருந்தது. இந்த தகவலுக்கு நடிகர் சாந்தனு பதில் அளிக்கும் வகையில் ரிப்ளை செய்துள்ளார்

மூவி பாப் நிறுவனம் நாங்கள் பார்த்துவிட்டோம் செங்கல் சூளையில் நடிகர் சாந்தனு செய்த சம்பவத்தை என்று பதிவிட அதற்கு நடிகர் சாந்தனு “ஹாஹா, வெளியீடு செய்து விடாதீர்கள்,ப்ளீஸ் ” என்று ஒருவித நகைச்சுவையோடு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

என் முலம் நடிகர் சாந்தினி ரசிகர்கள் அந்த திரைப்படத்தில் இருக்கும் ஐந்து நிமிட அல்லது நான்கு நிமிட காட்சியோ இன்னும் சில நேரத்தில் இணையதளத்தில் வெளியாக உள்ளது என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Most Popular