Friday, May 17, 2024
- Advertisement -
Homeசினிமா“திரிஷாவின் முன்னாள் காதலரை டேட்டிங் செய்தது உண்மை தான் ஆனால்…” - பிந்து மாதவி சொல்லும்...

“திரிஷாவின் முன்னாள் காதலரை டேட்டிங் செய்தது உண்மை தான் ஆனால்…” – பிந்து மாதவி சொல்லும் புதுக் கதை!

தமிழ் திரையுலகில் சிறந்த நடிகையாக ஒரு காலத்தில் அறியப்பட்டவர் பிந்து மாதவி. இவர் கழுகு திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தார். இந்த சூழ்நிலையில் அவர் செய்த ஒரு செயல் தற்பொழுது உலகிற்கு வெளிச்சமாகியுள்ளது.

- Advertisement -

அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் திரிஷாவின், காதலராக நாம் எல்லாருக்கும் அறியப்பட்டவர் தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளரான வருண்மணியன். இருவரும் 2016- 17-இல் நிச்சயதார்த்தம் வரை சென்று அவர்கள் திருமணம் தடைப்பட்டது. இதற்கு காரணமாக அப்போதே பிந்து மாதவி பேசப்பட்டார், இருந்தும் வருண்மனியன் இதை மறுத்தார்.

இருப்பினும் 2017 -18 களில் நடிகை பிந்து மாதவியும் வரன் மணியனும் விடுமுறை காலத்தை கொண்டாட மாலத்தீவு சென்ற போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஆனால் அதை வருண்மனியன் அவர் ஒரு நல்ல நண்பர், அவரை எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்ற போது அந்த வதந்திகளை அப்போது நிறுத்தினார்.

- Advertisement -

தற்பொழுது வருண்மணியன் மற்றும் பிந்து மாதவி உறவில் இருப்பதாக காணொளி ஒன்றில் நடிகை பிந்து மாதவி தகவல் தெரிவித்து இருக்கிறார். அவர் அந்த வீடியோவில் ” நானும் வருண்மணியனும் உறவில் இருந்ததே உண்மைதான். ஆனால் அவர் திரிஷாவுடன் தொடர்பில் இருந்த போது நான் அவரை நெருங்கவில்லை. திரிஷாவுடனான பயணம் அவருக்கு முடிந்த போது தான் நான் அவருடன் இணைந்து பயணிக்க ஆரம்பித்தேன் பின்னர் அன்றிலிருந்து இன்று வரை நாங்கள் அனைவரும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம் ” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் அந்த பதிவில் அவர் ” நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்போடும் அரவணைப்போடும் இருந்து வருகிறோம். இதனால் இங்கு எங்கள் இருவருடே இருக்கும் உறவானது மிகவும் அழகானது. இது நீண்ட காலத்திற்கு தொடரும் ” என்று அந்த வீடியோ பதிவிற்கு அவர் தெரிவித்து இருந்தார்.

இவர் இவ்வாறு பேசி இருப்பதன் மூலம் நடிகை திரிஷா மற்றும் வருன்மணியன் பிரிவிற்கு காரணமாக இருந்தவர் பிந்து மாதவி தான், என்பதை நம்மால் அறிய முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் ரசிகர்களிடமிருந்து எந்த விஷயத்தையும் அவ்வளவு எளிதில் மறைத்து விட முடியாது. அதனால் இவர்கள் இருவரின் பயணம் எவ்வளவு தூரம் தொடர போகிறது என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

Most Popular