Tuesday, October 15, 2024
- Advertisement -
Homeசினிமாவசூலில் வாரி குவிக்கும் கேரள ஸ்டோரி.. பிரபல யூடியூபரிடம் வசமாக சிக்கியது

வசூலில் வாரி குவிக்கும் கேரள ஸ்டோரி.. பிரபல யூடியூபரிடம் வசமாக சிக்கியது

பல்வேறு சர்ச்சைக்கு உள்ளாகி வெளியான கேரளா ஸ்டோரி திரைப்படம் நினைத்தது சாதித்து விட்டது. சர்ச்சுகளையும் வெறுப்பையும் உமிழும் வகையில் படம் எடுத்தால் வசூலில் கல்லா கட்டிவிடலாம் என்பது தற்போது எழுதப்படாத விதியாகிவிட்டது.

- Advertisement -

அந்த வகையில் வெளியான கேரளா ஸ்டோரி திரைப்படம் ஹிந்தி பேசும் மாநிலங்களில் வசூலை வாரி குவித்து வருகிறது. தற்போது வரை இந்த திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது./எனினும் தமிழ்நாடு கேரளா மேற்குவங்கம் ஆகிய ஊர்களில் படம் படுத்து தோல்வியை தழுவியுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், துருவ் ராதே என்ற இந்தியாவின் மிகப் பெரிய யூடியூபர்  கேரள ஸ்டோரிக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியது, பின்வருமாறு

- Advertisement -

கேரளா ஸ்டோரி  படத்தில் இஸ்லாமியர்கள் பெரும் சதி செய்து பெண்களை மூளைச்சலவை செய்து மதமாற்றி தீவிரவாதத்திற்கு ஏற்றுமதி செய்கிறார்கள் என சொல்கிறார்கள். இதற்கு முதலில் அவர்கள் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் யில் இணைந்ததாக கூறினார்கள்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆதாரம் கேட்டபோது எங்களிடம் இல்லை என்று உண்மையை ஒப்புக்கொண்டு 32,000 தை மூன்றாக மாற்றி விட்டார்கள், 32,000 மூன்றாக மாறிய பிறகு அது எப்படி இஸ்லாமியர்கள் செய்யும் சதியாகும். இது அங்கொன்றும் இங்கொன்றும் நடந்த சம்பவம் என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு விமானத்தில் இந்தியர்கள் மற்ற பயணிகள் மீது சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. இதுபோன்று மூன்று சம்பவம் நடைபெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்தை வைத்து வெளிநாட்டில் இந்தியன் ஸ்டோரீ என்று படம் எடுத்தால் அது எப்படி சரி இருக்காதோ, அதே போல் தான் ஒரு மதத்தையும் ஒரு மாநிலத்தையும் சித்தரித்துக் காட்டுவது சரி கிடையாது.

கேரளாவில் இது போன்று மொத்தமே மூன்று பெண்கள் தான் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து இருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் கிறிஸ்தவ மதத்திலிருந்தும், ஒருவர் ஹிந்து மதத்தில் இருந்தும் மதமாறி இருக்கிறார்கள் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.இந்த வீடியோ தற்போது பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றிருக்கிறது. இதனை பார்த்து சங்கி குரூப்புகளுக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு இருக்கிறது.

Most Popular