Wednesday, October 16, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் திரிஷா.. ! இந்த முறையும் அதே ஃபார்முலா வேலை செய்யுமா.....

மீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் திரிஷா.. ! இந்த முறையும் அதே ஃபார்முலா வேலை செய்யுமா.. ?

லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சில காரணங்களால் விக்னேஷ் சிவனுடன் செய்ய வேண்டிய படத்தை தவிர்த்த இதில் நடிக்கிறார் அஜித்குமார். 2 மாதங்கள் ஸ்கிரிப்ட் பணிகளில் தீவிரமாக இருந்த இயக்குனர் மகிழ் திருமேனி விரைவில் ஷூட்டிங்கை துவங்குகிறார்.

- Advertisement -

மே 8ஆம் தேதி சென்னை வந்த அஜித் தற்போது படக்குழுவுடன் பிரீ புரொடக்ஷன் வேளைகளில் கலந்து கொண்டுள்ளார். மே மாதம் இறுதி அல்லது ஜூன் முதல் வாரம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. 90 சதவீதம் மே 22ஆம் தேதி சென்னையில் துவங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் 70 நாட்கள் நடக்கும் ஷூட்டிங்கில் அஜித் 40 நாட்கள் வழங்கியுள்ளார்.

விடாமுயற்சி ஹீரோயின்

இதனிடையே இப்படத்தின் ஹீரோயின் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐஸ்வர்யா ராய், திரிஷா, கங்கனா ரவுத் ஆகிய மூவரில் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறினர். தற்போது தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ள செய்தியின் படி திரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்கின்றனர்.

- Advertisement -

கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் என மூன்று படத்திற்குப் பின்னர் மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்கிறார் திரிஷா. ரசிகர்கள் மத்தியில் அஜித் – திரிஷா ஜோடிக்கு பெரும் வரவு இருக்கிறது. முக்கியக் காரணம் இந்த காம்போவில் வந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட். அதே ஃபார்முலா இந்த படத்திலும் செல்லுமானால் மீண்டும் ஹிட் தான்.

- Advertisement -

அண்மையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷன் அனைத்தும் முடித்த திரிஷா லியோ ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். அடுத்து அஜித்துடன் இணைந்து விடாமுயற்சியில் நடிக்கவுள்ளார்.

Most Popular