நடிகர் சாந்தனு நடித்த ராவண கோட்டம் என்ற திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்கில் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்திற்கு ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பல தடைகளை தாண்டி இந்த படம் வெளியானது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவரும் சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் இந்த படத்தின் சிறப்பு காட்சியை சென்னையில் பார்த்தார். அப்போது செய்தியாளரிடம் பேசிய திருமாவளவன், ராவண கோட்டம் படத்தை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராவண கோட்டம் படத்தை இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சிறப்பாக ராமநாதபுரம் மாவட்ட மக்கள் வாழ்க்கையில் படமாக்கி இருக்கிறார்.
அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை முறை அரசியல் இயற்கை சூழலை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டுதல் சாதி பாகுபாடு அரசியல் கட்சிகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை சிறப்பாக எடுத்து இருக்கிறார்.
இந்த படத்தின் நாயகர்கள் நாயகி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இரண்டு சமுதாய மக்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனையை நாயகன் எப்படி கையாள்கிறார் என்பதை காட்டியிருக்கிறார்கள். இளைய திலகம் பிரபு படத்தில் ஒரு கிராம மக்களை வழிநடத்தும் நபராக நடித்திருக்கிறார்.
ஒட்டுமொத்தத்தில் இந்த படம் காதல் நட்பு அரசியல் சாதி சமூக ஒற்றுமை அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் சதி ஆகிய அனைத்தையும் பேசும் படமாக இயக்குனர் விக்ரம் எடுத்திருப்பதாக திருமாவளவன் பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் நடித்த நடிகர் சாந்தனு தமிழ் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு நேரடியாக பயணம் சென்று படத்தை பார்க்க இருக்கிறார்.