தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித் வரிசையில் புரட்சிகர கருத்துக்களை அனைவரும் ரசிக்கும் வகையில் சொல்பவர் மாரி செல்வராஜ். இவர் அடுத்த பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற திரைப்படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றி பெற்றவை.
இந்த வரிசையில் தற்போது மாமன்னன் என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் தொடர்பாக ஒரு அப்டேட் வந்துள்ளது .வடிவேலு எப்போதுமே தனித்துவமான நடிகராக விளங்கி இருக்கிறார்.காமெடி, குணச்சித்திரம் என அனைத்திலும் கலக்கும் வடிவேலு பாடலையும் சிறப்பாக பாடுவார். இதனால் எல்லாமே என் ராசாதான் படத்தில் இசைமேதை இளையராஜா இசையில் எட்டணா இருந்தால் என்ற பாடலை பாடி அதற்கு நடனமும் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
இதேபோன்று பல்வேறு முன்னணி இசையமைப்பாளர் பாடல்களிலும் வடிவேலு பாடியிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளிவந்த கோவில் திரைப்படத்திலும் வடிவேலு ஒரு பாடலை பாடி இருப்பார். இந்த நிலையில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஏ ஆர் ரகுமான் இசையில் வடிவேலு ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
இந்தப் பாடல் வரும் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக மாமன்னன் படக்குழு அறிவித்துள்ளது. இசையில் உச்சம் தொற்றவரும் காமெடியில் இமயமாக விளங்குபவரும் ஒரே படத்திற்காக இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் வடிவேலு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பாடல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மாமன்னன் திரைப்படம் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது