பல வருடங்களுக்குப் பின் இந்திய திரைப்படங்கள் அடுத்தடுத்து ஆஸ்கார் விருதுகள் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. பிரம்மாண்டமாக தயாராகி ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘ நாட்டு நாட்டுப் ’ பாடல் சிறந்த பாடலுக்கான பிரிவிலும் சிறந்த டாக்குமெண்டரி பிலிம் என்ற பிரிவில் ‘ தி எலியபேன்ட் விஸ்பரர்ஸ் ’ குறும்படமும் விருதுகளைத் தட்டிச் சென்றது.
யானைகளைப் பற்றிய குறும்படம் ஆஸ்கார் விருதுக்கு முன்பே பெரிய வரவேற்பைப் பெற்றது. உண்மையிலேயே யானைகளைப் பிள்ளைகளாக வளர்த்த பொம்மன் பெல்லி பற்றியே முழுக்க முழுக்க இந்தப் படம். 30 நிமிடங்கள் என்றாலும் அதில் எமோஷனல் டச் கொண்டு இயக்கியுள்ளார் கார்த்திக் கொஞ்சால்வேஸ். நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை பாலிவுட்டைச் சேர்ந்த குனீத் மோங்கா தயாரித்துள்ளார்.
மிகவும் உயரிய விருதான ஆஸ்கார் விருதை வெல்வது சாமான்ய காரியம் அல்ல. அது வென்றப் பின் இந்தியா முழுவதும் பல இடங்களில் நேர்காணலில் கலந்து கொண்டு அவர்கது சிறந்த தருணத்தைப் பற்றி பகிற்கின்றனர். அந்த வகையில் தி எலியபேன்ட் விஸ்பரர்ஸ் படத்தின் உரிமையாளர் குனீத் மோங்கா பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகிறார்.
அவர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கையோடு ஆஸ்கார் விருதையும் எடுத்துக் கொண்டு செல்கிறார். விமான நிலையத்தில் அவர் எடுத்துச் செல்லும் ஆஸ்கார் விருதுப் பை சோதனையில் சிக்குகுறது. சோதனைக்காக பையைத் திறந்து காட்டும்போது தான் அவருக்கு மனத் திருப்தி அளிக்காத செயல் நடந்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது, “ சோதனைக்காக விமான நிலையத்தில் ஆஸ்கார் விருதை எடுத்துக் காட்டும் போது அங்கிருக்கும் அதிகாரிகள் அதைப் பற்றி விசாரித்துவிட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் ஒருவர் கூட என்னுடன் இணைந்து ஃபோட்டோ எடுக்க மாட்டின்றனர். இவ்வளவு ஏன் வீட்டுக்கு வரும் உறவினர்கள் கூட விருதுடன் மட்டுமே ஃபோட்டோ எடுக்கிறார்கள். ” என வருத்தமாக பேசியுள்ளார்.
இவ்வளவு பெரிய விருதை வென்றும் அதற்கு உரிமையாளர் யார் என்றே பலருக்கு தெரியவில்லை. அப்படி தெரிந்தாலும் விருதுக்கு மட்டுமே மதிப்பு தருகின்றனர் ஒழிய அதைத் தயாரித்தவரை யாரும் கண்டு கொள்ளாதது நிச்சயம் மன வருத்தததக் கொடுக்கும்.