கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவருக்கு பெரும் பெயரை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால் அது ஜிகர்தண்டா தான். மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்று தந்தது.
இந்தப் படம் சென்னையில் 100 நாட்கள் ஓடியது. இதற்குப் பிறகு பெரிய இயக்குனராக வலம் வந்த கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டாரை வைத்து எல்லாம் இயக்கம் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் ஜிகிர்தண்டா படத்தின் இரண்டாவது பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் எடுத்து வருகிறார்.
இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.ஏனென்றால் இந்த டீசர் மிகவும் வித்தியாசமான தரத்தில் இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ஜிகர்தண்டா படத்தின் ரிலீஸ் தேதி இன்று வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டது . இதில் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.
அதில் திரையரங்கமும் ஒரு நபர் இருக்கையில் அமர்ந்து கொண்டு யாரையோ தீயில் எரிப்பது போல் ஒரு காட்சியை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இது பார்ப்பதற்கு திரில்லாக இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் புதிய அனுபவத்தை கொடுக்கும்.
முதல் பாகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இரண்டாவது பாகம் அமையும். ரசிகர்களுக்கு நல்ல கொண்டாட்டத்தை இந்த படம் கொடுக்கும். நினைத்ததை விட படம் நன்றாக வந்திருக்கிறது என்று கூறியுள்ளார் .
ஏற்கனவே தீபாவளிக்கு அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் பந்தயத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து தங்கலான் மற்றும் கேப்டன் மில்லர் படமும் தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.