பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகை திரிஷா தன்னுடைய சினிமா உலகில் மீண்டும் ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் தளபதி, தல போன்ற முன்னணி நடிகர்களுக்கு எல்லாம் கதாநாயகியாக சினிமா உலகில் வளம் வந்தவர் நடிகை திரிஷா.
சில நாட்கள் திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் ஓய்வில் இருந்தார்.
இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மூலம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறார் நடிகை திரிஷா.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது தளபதி விஜய் உடன் லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இதற்கு முன்பு இவர் கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி போன்ற திரைப்படங்களில் தளபதியோடு இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதை போல் இதை நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகை திரிஷா இயக்குனர் கௌரவ நாராயணன் இயக்கத்தில் தன்னுடைய 68வது திரைப்படத்தை நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் கவுரவு நாராயணன் தூங்கா நகரம், சிகரம் தொடு போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லியோ திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷாவுடன் இணைந்து மூன்று தென்னிந்திய பிரபலங்கள் இந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக நடிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது.
இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு தற்காலிகமாக ஒரு தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் முழுவதுமே பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ஆகும்.
இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷாவிற்கு மிக முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள தலைப்பு கொலை வழக்கு என்பதாகும்.
மேலும் இந்த திரைப்படத்தின் உடைய உண்மையான தலைப்பும், அந்த பிரபலங்களின் பெயர்கள் போன்ற விபரங்கள் எல்லாம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.