Thursday, May 9, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 68 - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.. முதல் முறையாக இணையும் வெங்கட் பிரபு

தளபதி 68 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.. முதல் முறையாக இணையும் வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்போது முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் லியோ திரைப்படம் முடிவதற்குள்ளே தனது அடுத்த படம் தொடர்பாக விஜய் பணிகளை தொடங்கி விட்டார். இதற்காக மூன்று இயக்குனர்களிடம் விஜய் கதை கேட்டார்.

- Advertisement -

கோபிசந்த், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரிடம் கதை கேட்டிருந்த விஜய் வெங்கட் பிரபுவுக்கு ஓகே சொல்லிவிட்டார். மாநாடு படம் மூலம் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை வெங்கட் பிரபு ஏற்படுத்தியிருந்தார். தற்போது தெலுங்கில் கஸ்டடி என்ற படத்தில் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

- Advertisement -

அது ரசிகர்களுடைய பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு அவர் சொன்ன கதை மிகவும் பிடித்து விட்டதாகவும், உடனே படத்தின் வேலையை ஆரம்பியுங்கள் என்று கூறிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தளபதி 68 படத்தில் அறிவிப்பு யாருமே எதிர்பாராத அளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை விஜயின் பிகில் திரைப்படத்தை இயக்கிய ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இது ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25 ஆவது திரைப்படம் ஆகும்.

இதேபோன்று புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யுடன் யுவன் சங்கர் ராஜா இணைந்து படம் செய்ய உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெங்கட் பிரபு, கனவுகள் நிஜமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் உடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று இந்தப் படம் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரிய இருப்பதாக ஏஜிஎஸ் நிறுவனம் கூறியுள்ளது. Suduko விளையாட்டில் படம் தொடர்பான  அறிவிப்பு வெளியான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Most Popular