Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமா“ நான் அனுராக் காஷ்யப்பின் வாய்ப்பை நிராகரிக்கவில்லை.. உண்மையில் நடந்தது இது தான் ” குற்றச்சாட்டுகளுக்கு...

“ நான் அனுராக் காஷ்யப்பின் வாய்ப்பை நிராகரிக்கவில்லை.. உண்மையில் நடந்தது இது தான் ” குற்றச்சாட்டுகளுக்கு முற்றிப் புள்ளி வைத்த விக்ரம்.. !

இந்திய சினிமாவில் மிகத் திறமை வாய்ந்த மற்றும் பிரபல இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். கேங்கஸ் ஆப் வாசிப்பூர், ராம் ராகவ், தேவ் டி ஆகிய படங்கள் இவரின் சிறந்தவை. கேங்கஸ் ஆப் வாசிப்பூர் எனும் கிரைம், கேங்கஸ்டர் படத்தைப் பார்த்து உலக சினிமா இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸே பாராட்டுக் கடிதம் எழுதினார்.

- Advertisement -

நினைத்துப் பாருங்கள் இவ்வளவு சிறந்த இயக்குனர் ஓர் சிறந்த நடிகரான விக்ரமுடன் இணைந்து செயல்பட்டால் எப்படி இருக்கும். சில தடங்களால் அது தடைபட்டுவிட்டது. அனுராக் காஷ்யப் அடுத்ததாக ‘ கென்னடி ’ எனத் தலைப்பிடப்பட்ட படத்தை இயக்குகிறார். இதில் ராகுல் பட், மேகா பர்மன், சன்னிலியோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி யாருக்கும் தெரியாமல் ஊழலை ஒழிப்பதற்கு வேலை செய்வதே கதை. இப்படத்தில் ஹீரோ சமூகத்திற்கு இறந்த மனிதர்.

கென்னடி படத்தை தவறவிட்ட விக்ரம்

இப்படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் விக்ரமை அணுகினார் இயக்குனர் அனுராக் காஷ்யப். இந்த வாய்ப்பை விக்ரம் வேண்டாம் எனக் கூறிவிட்டதாக அண்மையில் செய்திகள் வெளியானது. முதலில் ரோலக்ஸ் கதாபாத்திரம், லியோ தற்போது இந்த இயக்குனர் என அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகளை நழுவவிடுகிறார் என சமூக வலைதளங்களில் அவரை பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

- Advertisement -

அனைத்து வாய்களையும் உண்மையில் நடந்த விஷயத்தை கூறி அடைத்துள்ளார் நடிகர் விக்ரம். அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது, “ அன்புள்ள அனுராக், சமூக வலைதள நண்பர்களுக்காக நாம் ஒரு வருடம் முன்பு பேசியதை மீண்டும் நினைவுப்படுத்துகிறேன். ” எனத் துவங்கி நடந்த உரையாடலை விவரித்தார்.

- Advertisement -

விக்ரமை தொடர்புகொண்ட அனுராக் காஷ்யப்புக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. இந்தச் செய்தியை நண்பர் ஒருவர் மூலம் பெற்ற விக்ரம் உடனே இயக்குனர் அனுராக் காஷ்யப்பை அழைத்துப் பேசினார். தான் பயன்படுத்தும் மெயில் மற்றும் தொடர்பு எண் இரண்டும் செயலில் இல்லாததால் அனுராக்கின் தன்னைச் சேரவில்லை எனக் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், “ அனுராக் காஷ்யப்பின் கென்னடி படத்தை காண மிகவும் ஆர்வமாக உள்ளேன். ஏனெனில் இப்படம் எனது பெயரைக் கொண்டது. ” எனக் கூறியுள்ளார் விக்ரம் கென்னடி. விக்ரம் நடந்ததை சொன்னப்பின் நெட்டிசன்கள் அமைதியாகியுள்ளனர். சில தடங்களால் நல்ல ஓர் காம்போ மிஸ் ஆகியுள்ளது. சற்று வருத்தம் தான்.

Most Popular