தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பா ரஞ்சித். தன்னுடைய திரைப்படத்தில் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை அவர்களின் உரிமைகள் குறித்து புரட்சிகர கருத்துக்களை தனது படம் மூலம் பேசுவார்.
அட்டகத்தி,மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என்ற படங்களை பா ரஞ்சித் இயக்கி இருக்கிறார். தற்போது விக்ரமை வைத்து தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 3d தொழில்நுட்பத்தில் இந்த படம் தயாராகி வருகிறது. கோலார் தங்கச் சுரங்கத்தில் நடைபெறும் உழைப்புச் சுரண்டலை இந்த படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தங்கலான் படம் குறித்து பேசிய இயக்குனர் பா ரஞ்சித் தங்கலான் படத்திற்காக விக்ரம் ஆறு மாதங்களாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று கூறினார்.
சூட்டிங் சென்று ஆறாவது நாள் விக்ரம் எனக்கு போன் செய்தார். நானும் படம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுவார் என நினைத்தேன். ஆனால் இது போன்ற ஒரு அனுபவத்தை நான் எந்த படத்தில் பெற்றதில்லை. உங்களுடைய படத்தை இயக்கும் முறையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று பாராட்டினார்.
தற்போது வரை 15 நாட்கள் படத்தின் சூட்டிங் முடிவடைந்து இருக்கிறது. இன்னும் 20 நாட்கள் தான் பாக்கி இருக்கிறது என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார். இந்த படத்திற்கு பெரும் அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. இதற்கு தனியாக ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை தீபாவளிக்கு வெளியே கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்ட வருகிறது. எனினும் நடிகர் விக்ரமுக்கு தற்போது காயம் ஏற்பட்டிருப்பதால் படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் நடிகர் விக்ரமுக்கு பதில் டூப் போட்டு எஞ்சிய காட்சிகளை எடுத்து விடலாம் என்ற யோசனையில் படக்குழு இருக்கிறது.