தமிழ் திரைப்படத்தின் காமெடி கிங்காக வலம் வந்த நடிகர் கவுண்டமணியின் 84வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் கவுண்டமணி செந்தில் இல்லாத திரைப்படங்களே இருக்காது என்று சொல்லலாம்.
அவர் தற்போது பெரிய அளவில் நடிப்பதில்லை என்றாலும் இன்னும் இணையதளத்தில் டிரெண்டாகி கொண்டு தான் இருக்கிறார். நாம் யாரையாவது கிண்டல் செய்ய வேண்டும் என்றால் கூட கவுண்டமணியின் வசனத்தை தான் பயன்படுத்தி வேண்டியது இருக்கும்.
இந்த நிலையில் கவுண்டமணி குறித்து சத்யராஜ் ஒரு மேடையில் பேசிய சம்பவத்தை தற்போது பார்க்கலாம். நான் எப்போதும் ஒரே டேக்கில் வசனத்தை பேசி முடித்து விடுவேன். ஆனால் கவுண்டமணியுடன் நடிப்பதாக இருந்தால் எனக்கு பல ஷாட்கள் தேவைப்படும்.
ஏனென்றால் அவர் அருகில் இருந்து ஏதாவது காமெடி செய்து கொண்டே இருப்பார்.வீர நடை படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது எனக்கு வேறு படங்கள் அமையவில்லை. அப்போது ஏதோ ஒரு இயக்குனர் என்னிடம் கதை சொல்ல வருவதாக கூறினார்.
நான் பந்தாவுக்காக ஒரு கதை கேட்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே கவுண்டமணி, “என் சத்யா கண்ணுக்கெட்டிய தூரத்துல நம்மள எவனும் படத்துல நடிக்க கூப்பிட மாட்டான். ஏதோ ஒரு டைரக்டர் வராரு அந்த கதை பிடிக்கவில்லை என்றாலும் கதவை சாற்றிக் கொண்டு நீ எப்படியும் அந்த படத்துக்கு ஒப்புக் கொள்வாய், அப்புறம் எதுக்கு இந்த பில்டப் என்று கேட்டார்.
இதேபோன்று நாங்கள் நடித்த படத்தின் முதல் நாள் காட்சியை இயக்குனர் ரஷ் போட்டு பார்த்துவிட்டு அடுத்த நாள் கம்பீரமாக நடந்து வந்தார். அதைப் பார்த்தவுடன் ஒரு நாள் ஷூட்டிங் எடுத்துவிட்டு அதை எப்படி பெருமையாக நடந்து வருகிறான் பாருங்கள். அவன் படத்தை எடுத்து அது வெற்றி அடையுமா என்ற ஏக்கத்தில் இருப்பார்கள்.
ஆனால் இவரை பாருங்க ஃபேண்டை நெஞ்சு வரைக்கும் போட்டு இருக்கிறார். இவருக்கு சட்டைக்கு அரை மீட்டர் துணியும் பேண்டுக்கு 3 மீட்டர் துணி வாங்கினால் போதும் என்றும் கூறினார்.இதேபோன்று பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த போது ஒரு இயக்குனர் நடிகராக உருவெடுத்தார்.
அப்போது அந்த இயக்குனர் எங்கள் செட்டுக்கு வந்து எங்களை பார்த்தார். அப்போது ஒரு பள்ளிக்கு நான் சென்றதாகவும் அப்போது என்னை நடிக்க சொன்னதால் எனக்கு வேறு வழியின்றி தற்போது நானே நடிப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கு உடனே கவுண்டமணி அது blind ஸ்கூலாக இருக்கும் பா என்று கமெண்ட் அடித்தார். உடனே எனக்கு சிரிப்பு தாங்க முடியாமல் நான் அருகில் ஓடி விட்டேன் என்று சத்யராஜ் கூறியுள்ளார்.