2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் என்றால் அது லியோ தான். தளபதி விஜய் திரைப்படம் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எந்த திரைப்படம் தொட்டதில்லை. ஆனால் லியோ அதனைத் தொடும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனைத் தவிர வேறு எந்த பெரிய நடிகரும் தங்களுடைய படத்தை ப்ரோமோஷன் செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
விஜய் சென்னையில் இசை வெளியீட்டு விழாவை மட்டும் நடத்திவிட்டு சென்று விடுகிறார். அஜித் கேட்கவே தேவையில்லை. இந்த நிலையில் ஆயிரம் கோடி என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால் அதற்கு ப்ரோமோஷன் பணி மிகவும் முக்கியம்.
இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுக்க இருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக படத்தை பெரும் அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் மொத்தமாகவே 3000 திரையரங்குகள் இருக்கின்றது.
இதில் 1500 திரையரங்குகளில் லியோ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய லலித் முடிவெடுத்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் விஜய் சார் படத்தை விற்பனை செய்வதில் எந்த கஷ்டமும் இருக்காது. அமெரிக்காவில் 1500 திரையரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
மேலும் படத்தின் அனைத்து பணிகளும் ஜூலை மாதத்தில் முடிந்து விடும். அடுத்த இரண்டு மாதத்தில் பெரும் அளவில் ப்ரோமோஷன் செய்ய நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். விஜய் சார் படத்திற்கு வியாபாரம் செய்ய நாம் மெனக்கட தேவையே இல்லை. பலரும் இந்த படத்தை போட்டி போட்டு வாங்குவார்கள் .
ஆனால் நம் அதை எந்த அளவு புரொமோட் செய்து எப்படி பட்டத்தை செயல்படுத்துகிறோம் என்பதிலே வெற்றியின் அளவு இருக்கிறது. தற்போது சலார் படத்தை வெளியிடும் நிறுவனத்திடம் தான் வெளிநாட்டில் லியோ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.