Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாமாமன்னன் டிரைலர் இசை வெளியிட்டு விழா தேதி அறிவிப்பு..சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

மாமன்னன் டிரைலர் இசை வெளியிட்டு விழா தேதி அறிவிப்பு..சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் புரட்சிகர படங்களை எடுத்து பிரபலம் அடைந்தவர் மாரி செல்வராஜ் தற்போது அவர் நடிகர் உதயசீரி ஸ்டாலின் வடிவேலு ஆகியோருடன் இணைந்து மாமன்னன் என்ற திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்தப் படத்தில் பகத் பாஸில்,கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் எப்போதும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வடிவேலு இந்த படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.இந்த படத்தின் ஏற்கனவே இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மதியம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தில் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் மாதம் முதலாம் தேதி நடைபெற இருக்கிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கருத்துகள் மேடையில் பேசப்படலாம் எனும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரான பிறகு நடிகர் உதயநிதி ஸ்டாலின் சினிமாவிற்கு முழுக்கு போட உள்ளதாகவும் இதுதான் தமது கடைசி படமும் என்று அறிவித்திருக்கிறார். இதனால், இந்த படத்தை பெரிய அளவில் கொண்டாட உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் முடிவு எடுத்துள்ளனர். மாரி செல்வராஜ் திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் எனும் கருதப்படுகிறது.

Most Popular