இந்திய சினிமாவில் இதுவரை கிரிக்கெட் சம்மந்தப்பட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அது பொதுவான படமாக இருந்தாலும் சரி அல்லது எதேனும் ஓர் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறாக இருந்தாலும் சரி. கிரிக்கெட் வீர்ரகளைப் பற்றிய படங்களின் மூலம் அவர்கள் கடந்து வந்த பாதையை கண்ணால் பார்க்க நமக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.
இந்திய கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்த 2 கிரிக்கெட் வீரர்களின் படங்கள் தற்போது வரை கிடைத்துள்ளது. முதலிடத்தில் எம்.எஸ்.தோனி படம் தான். அதனைத் தொடர்ந்து சச்சினின் பில்லியன் ட்ரீம்ஸ் இடம்பெற்றுள்ளது. இவ்விரண்டு திரைப்படங்களில் கமர்ஷியலாக கொண்டு செல்லப்பட்ட எம்.எஸ்.தோனி திரைப்படம் நம் உணர்ச்சிகளை வென்றது.
இந்த இரண்டு படங்களைத் தவிர்த்து 1983 உலகக் கோப்பை வென்ற கபில் தேவ் & கோவின் படமும் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியானது. அப்படமும் மிகச் சிறந்த வரவேற்பை பெற்றது. கிரிக்கெட்டில் அடுத்ததாக விராட் கோலியின் வாழ்க்கையைப் படமாக எடுக்க பலர் எண்ணுகின்றனர் ஆனால் அதற்காக எந்த வித முயற்சியும் முழுமையாக எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
கங்குலியின் வாழ்கை வரலாற்றுப் படம்
இந்தியாவிற்காக சச்சின், தோனி உழைத்தது போல வெஸ்ட் பெங்கால் புலி சவுரவ் கங்குலியும் நிறைய செய்துள்ளார். அவரது வாழ்கை வரலாற்றை தான் இந்திய சினிமா அடுத்து பெறவிருக்கிறது. இப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். ஏற்கனவே தன் அப்பா ரஜினி மற்றும் விஷ்ணு விஷாலை வைத்து லால் சலாம் எனும் மற்றொரு கிரிக்கெட் படத்தை இயக்கி வருகிறார்.
தோனியின் படத்தின் சாயலிலே இந்தப் படமும் உருவாகிறது. குழந்தைப் பருவத்தில் துவங்கி இந்திய கிரிக்கெட் வரை அனைத்தும் படமாக்கப்படுகுறது. பிசிசிஐ தலைவராக உயர்ந்ததையும் சேர்ப்பார்கள் எனத் தெரிகிறது. சவுரவ் கங்குலியின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகரும் உறுதியாகியுள்ளார். முதலில் ரன்பீர் கபூர் எனப் பேசப்பட்ட செய்திகள் அனைத்தும் வதந்தி. உண்மையில் ஆயுஷ்மான் குரானா தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஆர்ட்டிகள் 15, அந்தகன், பதாய் ஹோ, ஆக்க்ஷன் ஹீரோ ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்தவர் இவர். இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.