Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் தனுஷுடன் ஜோடி சேரும் திரிஷா.. ! கொடிப் படத்தைப் போல வில்லியா இல்லை ஹீரோயினா.....

மீண்டும் தனுஷுடன் ஜோடி சேரும் திரிஷா.. ! கொடிப் படத்தைப் போல வில்லியா இல்லை ஹீரோயினா.. ? லேட்டஸ்ட் அப்டேட் வெளியீடு.. !

தமிழ் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகராக விளங்குபவர் தனுஷ். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிப்பது, பாடல்கள் எழுதுவது, பாடுவது மேலும் ஸ்கிரிப்ட் எழுதுவதில் கூட கவனம் செலுத்துகிறார். தற்போது இயக்குனர் அருண் மாத்தீஸ்வரன் தலைமையில் கேப்டன் மில்லர் படத்தில் பல மாதங்களாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகுகிறது. தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்கள் தள்ளிப் போகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை நிறைவு செய்த உடனே தனது இயக்கத்தில் அடுத்த படத்தை துவங்குகிறார். அது தனுஷின் 50வது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷ் 50 படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வந்துவிட்டது. அப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் என ஓர் நட்சத்திர கூட்டமே இடம்பெற்றுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நபர்களையும் படக்குழு தேர்வு செய்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்த சொல்லியுள்ளார் தனுஷ். கிடைத்துள்ள செய்திகளின் படி திரிஷா ஒப்பந்தம் ஆவது உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஃபோட்டோ ஷூட்டுக்காக தனுஷ் – திரிஷா மும்பையில் சந்திக்கவும் இருக்கின்றனர். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்போடு புகைப்படங்களும் வெளியாகும்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 1, 2, லியோ, கமல் ஹாசன் 234, தற்போது தனுஷ் 50 என பெரியப் படங்களாக நடித்து கொண்டிருக்கிறார் திரிஷா. நடிகர் தனுஷுடன் இணைவது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன் கொடி படத்தில் ஹீரோயினாகவும் அதே சமயம் வில்லியாகவும் நடித்தார். ஆனால் இந்தப் படத்தில் அவர் ஒப்பந்தம் ஆகவிருப்பதu கதாநாயகி கதாபாத்திரத்திற்கு தான்.

Most Popular