Monday, September 15, 2025
- Advertisement -
Homeசினிமாவிடாமுயற்சி படத்திற்காக வெளிநாடு சென்ற அஜித்

விடாமுயற்சி படத்திற்காக வெளிநாடு சென்ற அஜித்

தளபதி விஜய் வாரிசு திரைப்படத்திற்கு பிறகு லியோ தளபதி 68 என அடுத்தடுத்து படங்களை ஒப்பந்தம் செய்த நிலையில் நம்ம தல அஜித் என்ன பண்ணிட்டு இருக்காரு என ரசிகர்கள் சோகத்தில் இருந்திருக்கலாம்.

- Advertisement -

ஆனால் அஜித் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன் என்று பைக்கில் ஊர் சுற்ற தொடங்கி ஒரு வழியாக தனது முதல் கட்ட பயணத்தை முடித்து விட்டார். அப்பாடா இனிமேலாவது அடுத்த படம் தொடர்பான வேலைகளை ஆரம்பிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

- Advertisement -

ஆனால் இம்முறை தவறு அஜித் மீது அல்ல லைக்கா நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதால் அவர்களால் அடுத்த படம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது.

- Advertisement -

இதனால் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் எனக் கூறப்பட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் ஆகியும் இன்னும் நடைபெறவில்லை. இந்த நிலையில் விடாமுயற்சி தொடர்பான ஒரு சூப்பர் அப்டேட் நமக்கு கிடைத்துள்ளது.

அதன்படி நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்திற்காக கெட்டப்பை மாற்றும் பணிக்காக வெளிநாடு சென்று இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்தும் மகிழ் திருமேனியும் வெளிநாடு செல்லும் முன் விமான நிலையத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதன் காரணமாக நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மீது கவனம் செலுத்தி விட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பும் வெளிநாட்டில் தான் நடைபெறும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் நடிகர் அஜித் ஹீரோயின் யார் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

Most Popular