தமிழ் சினிமாவில் தற்போது கொடிகட்டி பறக்கும் இசை அமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். இளசுகளை கட்டிப்போடும் அனிருத் தற்போது லியோ திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.
லியோ திரைப்படத்திற்காக பிரம்மாண்டமான இசையை அனிருத் அமைத்து வருகிறார். விஜய்யும் அனிருத்தும் கூட்டணி சேர்ந்தால் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
கத்தி,மாஸ்டர், பீஸ்ட் என இந்த ஜோடி ஹாட்ரிக் வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் ஆக்சன் படத்தின் கலக்குவது மட்டுமல்லாமல் பாடலில் பாடியும் அசத்துவார். விஜயின் தாய் சோபா ஒரு பாடகர் என்பதால் விஜய்க்கு இயற்கையாகவே அந்த திறமை இருக்கிறது.
விஜய் தொடர்ந்து தன்னுடைய படங்களில் பாடி வந்தாலும் இடையில் பெரிய கேப் ஒன்றை விட்டார். அதன் பிறகு துப்பாக்கி படத்தில் கூகுல் கூகுள் என்ற பாடலை தான் அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு பாடினார். அது மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் தற்போது தொடர்ந்து தனது படங்களில் பாடிவரும் பழக்கத்தை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் கத்தி திரைப்படத்தில் அனிருத் இசையில் செல்பி புள்ள என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது. இதே போன்று மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி ஸ்டோரி என்ற பாடல், பீஸ்டு படத்தில் ஜாலியா ஜிம் கானா என்ற பாடல் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.
இந்த வகையில் இந்த ஜோடி நான்காவது முறையாக லியோ படத்திலும் இணைந்து இருக்கிறது. விஜய் பாடிய பாடலை தான் தற்போது சென்னையில் பட குழு சூட்டிங் செய்து வருகிறது. இந்தப் பாடலில் ஆடுவதற்காக 2000 நடன கலைஞர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப் பாடலை தினேஷ் மாஸ்டர் தான் நடனம் அமைத்து வருகிறார். இந்த பாடலும் முந்தையம் மூன்று பாடல்கள் போல் மிகப் பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜயின் பிறந்தநாள் முன்னிட்டு இந்த பாடல் ரிலீஸ் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.