Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாராட்சசன் மாதிரியே இருக்கா போர் தொழில்.. ? குறைகள் என்ன.. எது சிறந்த படம்.. ?...

ராட்சசன் மாதிரியே இருக்கா போர் தொழில்.. ? குறைகள் என்ன.. எது சிறந்த படம்.. ? விவாதம்

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜன் இயக்கியுள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் போர் தொழில். சைக்கோ கொலைகளைப் பற்றிய இந்தப் படம் பெரிய அளவில் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சரத்குமார் – அசோக் செல்வன் காம்போ நடிப்பில் மிரட்டியுள்ளனர். இதர நடிகர்களும் அவரவர் பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

- Advertisement -

காட்டில் தொடர்ந்து கிடைக்கும் சடங்கள் அனைத்தும் ஒரே வகையில் கொல்லப்படுவதை போலீஸ் அறிந்து சைக்கோ கொலைகாரனை நெருங்குகின்றனர். அந்தக் குற்றவாளிக்கும் சரத்குமார் – அசோக் செல்வனுக்கு இடையே நடக்கும் சண்டை தான் போர் தொழில். படத்தின் திரைக்கதை மிகப் பிரமாதம். பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைத்து திரில்லர் படங்களில் இது சுலபமாக நுழைந்தது.

கதை, திரைக்கதை தவிர இசை படத்தின் அடுத்த தூண். திருச்சியைச் சுற்றி நடக்கும் இக்கதையின் லொகேஷன் அனைத்தும் நம்மளை அந்தப் படத்திற்குள்ளேயே அழைத்துச் சென்றுவிடும். சைக்கோ கொலை என்றவுடன் அனைவரது நினைவுக்குக் வருவது ராட்ச்சன். அந்தப் படத்தையும் போர் தொழில் படத்தையும் பலர் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

- Advertisement -

இரண்டு படங்களும் நல்ல திரில்லர் படங்களே. ஆனால் இந்த வகையில் இன்னும் முதன்மை இடத்தில் வகிப்பது ராட்சசன் படமே. போர் தொழில் படம் பார்த்தவர்கள் உற்று நோக்கினால் அது ராட்ச்சன் சாயலில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும். இனி வரும் பத்திகளில் ஸ்பாய்லர் இருக்கலாம்.

- Advertisement -

போர் தொழில் படமும் ராட்சசன் படத்தைப் போலே முதலில் தவறான குற்றவாளியை நோக்கி ஓடுகிறது. ராட்சனில் அதை குறைந்த நேரத்தில் கண்டுவிட்டனர். ஆனால் போர் தொழில் படத்தின் பாதி காட்சிகள் தவறான நபரைச் சுற்றியே. ஒரு சிறிய வித்தியாசம் அவ்வளவு தான். குடும்பத்தில் ஓர் நபரை கிளைமாக்சில் கடத்துவது ராட்சசன் படமல்ல பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் ஒன்று.

இந்தப் படத்தில் நாயகனாக வரும் அசோக் செல்வனுக்கு சில இடங்களில் பயம் இருப்பதை ஒரு குறையாக காட்டி இருக்கிறார் இயக்குனர். இது பொதுவாக காட்டப்படும் சினிமா வகையிலேயே அடங்கும். படத்தின் பெரிய குறை எனக் கூறினால் உண்மையான வில்லனின் கதாபாத்திரம் தான். அது சற்றும் பயத்தை உண்டாக்காமல் முடிவடைந்தது. கிளைமாக்ஸ் காட்சிகள் பெரிய அளவில் தாக்கத்தைக் கொடுக்கவில்லை.

ராட்சசன் படத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. தியேட்டருக்கு சென்று பார்த்தால் நிச்சயம் சிறப்பான ஓர் அனுபவத்தைக் கொடுக்கும். படத்தில் இசை மற்றும் சவுண்ட் தாரமான பயத்தையும் அளிக்கும்.

Most Popular