Wednesday, December 4, 2024
- Advertisement -
Homeசினிமாநந்தினி.! நந்தினி! ஒரே ஷாட்டில் தெறிக்கவிட்ட எஸ்.ஜே. சூர்யா

நந்தினி.! நந்தினி! ஒரே ஷாட்டில் தெறிக்கவிட்ட எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி நடிகராக பின் வில்லன் நடிகராக வளர்ந்து தனக்கென ஒரு பெயரை பெற்றிருப்பவர் எஸ் ஜே சூர்யா. எஸ் ஜே சூர்யாவின் நடிப்புக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

சமீபத்தில் மாநாடு திரைப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதிலும் ஒரு காட்சியில் வந்தான் சுட்டான் போனான் ரிப்பீட்டு. வந்தான் சுட்டான் போனான் ரிப்பீட்டு. என்று பேசிய காட்சி பெரும் ஹிட் அடித்தது.

- Advertisement -

இதேபோன்று வதந்தி என்ற வெப் சீரிஸில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருந்தார். இது அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் ஒரு காட்சியில் எஸ் ஜே சூர்யா ஒரே ஷாட்டில் தொடர்ந்து இரண்டு நிமிடத்திற்கு மேல் பேசி அசத்து இருப்பார்.

- Advertisement -

இந்த வகையில் தற்போது பொம்மை என்ற திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார். இதில் பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இந்த வகையில் இந்த படம் வரும் ஜூன் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதில் எஸ் ஜே சூர்யா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா ஒரே ஷாட்டில் மூன்று நிமிடம் டயலாக் பேசி அசத்திருக்கிறார். அதில் தாம் நந்தினி என்ற சிறு குழந்தையுடன் இருந்ததாகவும் அந்த பெண்ணை கோயில் திருவிழாவில் யாரோ கடத்தி விட்டு சென்றதாகும் கூறுகிறார்.

அப்போது எஸ்.ஜே சூர்யா பேசும்போது முக பாவனைகள் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் அமைதி ,சிரிப்பு ,அழுகை, கோபம் என அனைத்தியுமே எஸ் ஜே சூர்யா தன் நடிப்பில் காட்டி இருக்கிறார்.

இந்த காட்சி கிட்டத்தட்ட மூன்று நிமிடம் ஓடுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்காகவே இந்த படம் ஹிட் ஆகும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது இந்த காட்சியை படக்குழு யூட்யூபில் வெளியிட்டு இருக்கிறது.

Most Popular