இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் 100 நாள் வரை ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தின் பிரதீப் ரங்கநாதன் இவானா சத்யராஜ் யோகி பாபு ரவீனா ரவி ராதிகா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடித்திருந்தார் ரவீனா ரவி. இவர் ஆரம்பத்தில் நிறைய திரைப்படங்களை கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரலாக இருந்திருக்கிறார்.
1999 ஆம் ஆண்டு நடிகர் முரளி மற்றும் ரோஜா நடித்த ஊட்டி திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக ரவீனா ரவி நடித்து இருக்கிறார்.
இப்படி தொடங்கியது தான் இவருடைய இந்த பயணம். இதேபோல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் உள்ள கதாநாயகிகளுக்கும் இவர் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லவ் டுடே திரைப்படம் தான் இதற்கு முன்பும் ஒரு சில திரைப்படங்களில் அவர் துணை நடிகையாக நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கியது லவ் டுடே திரைப்படம். இதைத்தொடர்ந்து இவர் ஒரு youtube சேனலில் பேட்டி ஒன்று தான் அடுத்தடுத்து என்னென்ன திரைப்படங்கள் நடித்திருக்கிறார் என்பதை கூறியிருக்கிறார் நடிகை ரவீனா ரவி.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம் ரவீனா ரவி. இதைத்தொடர்ந்து வட்டார வழக்கு என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இங்கு திரைப்படம் படப்பிடிப்பு முழுமை அடைந்தது ஆனால் இந்த திரைப்படத்தின் உடைய இசையமைப்பாளர் இளையராஜா தற்போது திரைப்படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து தன்னுடைய அடுத்த படத்தையும் நடிக்க போவதாகவும் திரைப்படத்தின் இயக்குனர் தட்சிணாமூர்த்தி என்பவர் தான் என்று கூறியிருக்கிறார்.
மேலும் நடன இயக்குனர் சார்ல்ஸ், ஆன்தாலாஜி வகை திரைப்படத்தை இயக்கப் போவதாகவும் அந்த திரைப்படத்திலும் நடிகை ரவீனா ரவி நடிக்கப் போவதாக கூறியிருக்கிறார்.