விஜய் டிவியின் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர்தான் ரோபோ சங்கர் .ஆனால் தற்பொழுது இவர் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார்.
ஆரம்பத்தில் இவர் திரைப்படங்களில் ஆட்டோ டிரைவராக , அடியாளாக யாரோ ஒருவருக்கு அண்ணனாக என்று மறைமுகமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மன்னர் வகையறா போன்ற திரைப்படங்கள் இவருக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
அதிலும் இவர் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் இவருடைய நகைச்சுவைக்கு என்றும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். காலையில மணி ஆறு என்ற இவருடைய வசனம் மிகப் பிரபலமானது.
இப்படிப்பட்ட ரோபோ சங்கர் சில நாட்களாக படங்கள் எதிலும் நடிப்பதில்லை பருமனான உடலை கொண்ட இவர் திடீரென்று உடல் மெலிந்து காணப்படுகிறார். சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் பிரபுவிடம் நான் குண்டானா நல்லா இருக்காது நீ எழச்சா நல்லா இருக்காது என்று ஒரு வசனத்தை கூறுவார். அதுதான் ஞாபகம் வருகிறது. ஏனெனில் பழைய ரோபோ சங்கர் தான் பார்ப்பதற்கு ஆரோக்கியமான மனிதராக தெரிந்தார்.
ஆரம்ப காலத்தில் அவர் பங்கு பெற்ற கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அவருக்கு விஜயகாந்தினுடைய குரலும் பாவனையும் மிகப் பொருத்தமாக இருக்கும். அதை வைத்து அவர் நிறைய மிமிக்கிரிகள் செய்திருக்கிறார். தற்பொழுது அவரைப் போலவே பருமனாக இருந்த ரோபோ சங்கர் விஜயகாந்த் எப்படி மெலிந்தாரோ அதேபோன்று மெலிந்திருக்கிறார்.
அவரைப் பார்ப்பதற்கு டயட் உடற்பயிற்சி எல்லாம் செய்து உடலை ஆரோக்கியமான முறையில் குறைத்தது போன்று தோன்றவில்லை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இளைத்தது போல் தான் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் இவருக்கு குடிப்பழக்கம் அதிகம் இருப்பதால் அதன் காரணத்தினால் தான் இப்படி ஆகி இருக்கும் என்றெல்லாம் கூறினார்கள்.
அதற்கும் அவர் தற்பொழுது விளக்கம் கொடுத்திருக்கிறார் “எனக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருந்தது. அதன் காரணத்தினால் என் உடல் மெலிந்து விட்டது என்று கூறியதுடன்.
உடல் நலக்குறைவு யாருக்குத்தான் இல்லை தல அஜித் மிகவும் சுறுசுறுப்பாக எல்லா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவரோடு நான் விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்த போது அடிச்சு தூக்கு என்ற பாடலில் நடனமாடும் பொழுது அவருக்கு முழங்காலில் வலி ஏற்படும்.
ஷூட்டிங் முடிந்த பிறகு வாய்விட்டு கூட அவர் அழுது இருக்கிறார். பிறகு ஷார்ட் ரெடி என்று கூறினால் எதுவுமே தெரியாதது போல் வந்து நடிப்பார். திரைப்பட படப்பிடிப்பு முடிந்து செல்லும் பொழுது ஒவ்வொரு டெக்னீசியருக்கும் ஏதாவது ஒன்றை அவர் கொடுத்து அனுப்புவார்.அவ்வபோது எல்லாருக்கும் பிரியாணியும் செய்து கொடுப்பார்
அதை அவரே பரிமாறுவார் என்றும் கூறியிருந்தார். நீங்கள் எங்களுக்கு பரிமாறினீர்கள் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். இதை ஒரு வீடியோ எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டால் அதற்கு சிரித்துக்கொண்டே நோ என்று சொல்லிவிடுவார் என்று நடிகர் ரோபோ சங்கர் இதுவெல்லாம் தல அஜித்தின் சிறப்பம்சங்கள் என்று கூறியிருந்தார்.