கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதைத்தொடர்ந்து இவர் கல்லூரி, கண்டேன் காதலை ,படிக்காதவன், அயன் என்று பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் இவர் மிகப் பிரபலமானது தமிழ் சினிமாவில் தான் விஜய், அஜித் ,தனுஷ் போன்ற முன்னண நடிகர்களுக்கெல்லாம் கதாநாயகியாக நடித்திருக்கிறார் .தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார் நடிகை தமன்னா.
பையா,சிறுத்தை போன்ற திரைப்படங்களில் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து நடித்த பொழுது இவர் கார்த்திக்கை காதலிக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவி வந்தது. ஆனால் நடிகர் கார்த்திக்கு பெற்றோரின் தேர்ந்தெடுத்த பெண்ணை திருமணம் செய்த பிறகு இது போன்ற வதந்திகள் எதுவும் பரவாமல் இருந்தது. அதற்குப் பிறகும் தமன்னா அவருடைய சினிமா பயணத்தை சிறந்த முறையில் தொடர்ந்து வந்தார்.
2015 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட பாகுபலி திரைப்படத்தில் கூட அவதிக்கா என்ற கதாபாத்திரத்தில் மகேந்திர பாகுபலி ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு முக்கியத்துவம் இருந்து வந்த நிலையில் திடீரென்று இவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. சில நாட்களாக இவர் எந்த தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதில்லை. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் தற்பொழுது ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கு தமிழ் திரைப்படங்களில் தனக்கென ரசிகர்களை குவித்த தமன்னா தற்பொழுது பாலிவுட் சினிமாவிற்கு சென்றிருக்கிறார். இதிலும் பல திரைப்படங்களை நடிகை தமன்னா நடித்து வருகிறார் தற்பொழுது கூட நடிகர் அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்தை தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியை வைத்து எடுத்து வருகிறார்கள்.
அத்திரைப்படத்தில் கூட நடிகை தமன்னா சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ஏறத்தாழ 12 வருடங்களாக 60 திரைப்படத்திற்குமே தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார் நடிகை தமன்னா.
இப்படிப்பட்ட பிரபலமான தமன்னாவிற்கு ஏன் இதுவரை திருமணம் நடக்கவில்லை என்று கேள்வி பலரிடம் இருந்து வந்தது. அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தற்பொழுது நடிகை தமன்னா பாலிவுட்டில் தன்னுடன் இணைந்து நடித்த விஜய் வர்மாவை காதலிப்பதாக கூறியிருக்கிறார்.
இவர்கள் இருவரும் லஸ்ட் ஸ்டோரி 2 என்ற படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாகவும் நான் எவ்வாறானவர் வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே இவர் இருக்கிறார் என்றும் தமன்னா கூறி இருக்கிறார். என்னோடு இணைந்து நடித்த நடிகரை எல்லாம் நான் காதலிப்பேன் செய்வேன் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
அதேபோல் விஜய் வருமாவும் நாம் நினைத்தது போல் எதுவும் நடப்பதே இல்லை பத்து ஆண்டுகள் தான் நான் நடிப்பேன் என்ற நினைத்து தான் சினிமாவிற்குள் வந்தேன். ஆனால் இன்னும் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். முப்பது வயதில் குழந்தைகளை பெற்று குடும்பஸ்தன் ஆகி விடுவேன் என்று நினைத்தேன்.
ஆனால் இதுவரை சிங்கிளாக தான் இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார். திருமணம் என்பதற்கு நிறைய பொறுப்புகள் வேண்டும். திருமணம் செய்யும் அளவிற்கு எனக்கு பொறுப்பு வந்துவிட்டது என்ற எண்ணம் எப்பொழுது எனக்கு வருகிறதோ அப்பொழுது திருமணம் செய்து கொள்வேன் என்று விஜய் வருமா கூறி இருக்கிறார். கூடிய விரைவில் நடிகை தமன்னாவும் விஜய் வர்மாவினுடைய திருமணத்தைப் பற்றிய தகவல்கள் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்