Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் vs தனுஷ் படங்கள் மோதியதில் யாருக்கு அதிக வெற்றி?

விஜய் vs தனுஷ் படங்கள் மோதியதில் யாருக்கு அதிக வெற்றி?

நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.இந்த நிலையில் கேப்டன் நிலா திரைப்படம் வெளியிடப்படும் அதே அக்டோபர் மாதம் தான் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படமும் வெளியிடப்பட இருக்கிறது.

- Advertisement -

- Advertisement -

ஆனால் தளபதி விஜய்யும் நடிகர் தனுஷும் நடித்த திரைப்படங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வது இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்பே ஆறு முறை இதுபோன்று இரண்டு திரைப்படங்களும் ஒரே நாட்களில் அல்லது ஒரே மாதத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

2005 ஆம் ஆண்டு திருப்பாச்சி மற்றும தேவதையை கண்டேன் என்ற இரண்டு திரைப்படங்களும் பொங்கல் அன்று வெளியிடப்பட்டது. இது தளபதி விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படமும் தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் திரைப்படமும் சிறந்த கதை களத்தை கொண்டது என்பதால் இரண்டுமே வெற்றியை தொட்டது. வசூல் ரீதியாக திருப்பாச்சி மாபெரும் வெற்றியை பெற்றது.

அதே வருடம் தீபாவளியன்று நடிகர் தனுஷிற்கு அது ஒரு கனா காலம் என்ற திரைப்படமும் தளபதி விஜய்க்கு சிவகாசி திரைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால் தனுஷ் நடித்த திரைப்படத்திற்கு பெரிய அளவில் எந்த வரவேற்பும் இல்லை. சிவகாசி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

இதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு விஜய்க்கு அழகிய தமிழ் மகன் திரைப்படமும் தனுஷின் பொல்லாதவன் திரைப்படமும் வெளியிடப்பட்டது. அதில் அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை விட இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

2009 ஆம் ஆண்டு பொங்கல் அன்று விஜயின் வில்லு திரைப்படமும் தனுஷின் படிக்காதவன் திரைப்படமும் ஒரே நாளில் வெளியிடப்பட்டது .இதில் வில்லு திரைப்படத்தை விட படிக்காதவன் திரைப்படம் ரசிகர்களை பெரும் அளவில் ஈர்த்து வெற்றி அடைந்தது.

மேலும் 2011 ஆம் ஆண்டு தளபதி விஜயின் காவலன் திரைப்படமும் நடிகர் தனுஷின் ஆடுகளம் திரைப்படம் ஒரே நாளில் வெளியிடப்பட்டது. காவலன் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருந்தது ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பும் கிடைத்தது.ஆனால் நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படமும் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றதோடு தேசிய விருதுகளையும் பெற்று வெற்றி அடைந்தது இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களை பெருமளவில் கொண்டாட வைத்தது.

பிறகு 2018 ஆம் ஆண்டு தீபாவளியன்று தளபதி விஜயின் சர்க்கார் திரைப்படமும் நடிகர் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படமும் வெளியிடப்பட்டது. இதில் தனுஷ் நடித்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது ஆனால் தளபதி விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி பெற்று மாபெரும் வெற்றியை அடைந்தது.

பொதுவாக தளபதி விஜய் மற்றும் தல அஜித் இருவரோடு தான் ரசிகர்கள் போட்டியிடுவார்கள். அப்படித்தான் திரைப்படங்களும் வெளியிடப்படும். இப்படி எதிர்ச்சியாக வெளியிடப்பட்ட திரைப்படங்களில் நடிகர் தனுஷும் விஜயும் ஆறுமுறை மோதி இருக்கிறார்கள் ஆனால் இது எதுவும் பெரிய அளவில் ரசிகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இவர்களை எதிரிகளாக அவர்களால் பார்க்க முடியாது. விஜய் தனுஷ் இருவருக்குமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டால் ரசிகர்கள் இன்னும் இதை கொண்டாடி மகிழ்வார்கள். இதுக்குள் எந்த போட்டியும் இருக்காது என்றும் தோன்றுகிறது.

தல, தளபதி மற்றும் சிம்பு, தனுஷ் ஒருவரோடு ஒருவர் மோதினால் தான் ரசிகர்களுக்குள் போட்டி வரும் .ஆனால் ஆனால் தனுஷ் ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் இணைந்து தான் இருப்பது இரண்டு திரைப்படங்களையும் இணைந்து கொண்டாட வாய்ப்பு இருக்கிறது.

Most Popular