சமீப காலமாகவே திரைப்படங்களில் ஒரு மதத்தினருக்கு சாதகமாகும் இன்னொரு மதத்தினரை விமர்சிக்கும் வகையிலும் பாலிவுட்டில் தொடர்ந்து திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ராமாயண கதையை வைத்து ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தை இயக்குனர் ஓம்ராவத் இயக்கினார். இதில் பிரபாஸ், கீர்த்தி சோனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ராமர் சீதையாக நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தை இந்து அமைப்பினர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. ஆதிபுருஸ் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும். ஆதி புரூஸ் படத்தை தயாரித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
ராமாயணத்தை மாற்றி சில காட்சிகளை இயக்குனர் எடுத்திருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக ஹனுமர் சீதையை சந்திக்கும் போது இந்து முறைப்படி வணங்குவார். ஆனால் இந்த படத்தில் இஸ்லாமிய முறைப்படி தன் நெஞ்சில் கை வைத்து ஹனுமர் பேசுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் ராமர் ஒரு காட்சியில் இயேசு கிறிஸ்து போல் தோன்றுவதும் சீதை பிராட்டியை போர்க்களத்திற்கு கொண்டு வருவது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இது ராமாயணத்தில் இல்லாத ஒன்று என்று ரசிகர்களும் குற்றச்சாட்டி உள்ளனர்.
இதேபோன்று ஹனுமார் இந்திரஜித் இடம் பேசும் போது மூன்றாம் தர நபர்கள் பேசும் வசனத்தை இயக்குனர் பயன்படுத்தியிருப்பதும் ரசிகர்களை கொதிக்க வைத்துள்ளது. இது அனுமாரை கேவலப்படுத்தும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மேலும் இந்து புராணங்களை அவமதிக்கும் விதமாக பல காட்சிகள் இருப்பதாகவும் சீதா பிராட்டியின் உடை கூட சரியில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பல்வேறு திரையரங்குகளில் கூட்டம் குறைய தொடங்கியிருக்கிறது படம் பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது