நடிகர் விஜய் சினிமாவைத் தாண்டி மக்களுக்கு மத்தியில் பெரிய மரியாதையை சம்பாதித்து வருகிறார். அண்மையில் வெளியான 12ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து கவுரவித்தார். அவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கி விழாவைச் சிறப்பித்தார்.
நடிகர் விஜய் தன் மக்கள் இயக்கத்தால் தொடர்ந்து சமுதாய நலன்களை செய்கிறார். தன் ரசிகர்களையும் அடுத்தவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்யுமாறும் எதேனும் தேவைப்பட்டால் தன்னிடம் தயங்காமல் கேட்குமாறும் கூறியுள்ளார். இவ்வாறு நிகழ்ச்சிகள் அமைப்பதெல்லாம் அவர் அரசியலுக்குள் நுழைவதற்கு செய்யும் வித்தைகள் என அடுத்தவர்கள் குற்றம் சாட்டினாலும் மறுக்க முடியாத ஒன்று, இவையனைத்தும் சிறந்த செயல்களே !
நிகழ்ச்சியில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் 600/600 மதிப்பெண்கள் பெற்ற நந்தினிக்கு வைர நகையை பரிசாக அளித்தார் தளபதி விஜய். அவரின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். விஜய் ரசிகர்களும் மிகப் பெருமையாக கருதுகின்றனர். விழா விஜய்யின் உரையோடு துவங்கியது.
மாணவர்களை மேலும் சிறப்பாகப் படிக்கச் சொல்லி அசுரன் படத்தில் இருந்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வசனத்தையும் குறிப்பிட்டார். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றியும் படிக்கச் சொல்லி அறிவுறுத்தினார். அவரது உரைக்குப் பிறகு பரிசளிப்பு ஆரம்பித்தது. இடையில் அனைவருக்கும் நல்ல விருந்தும் கொடுக்கப்பட்டது.
மேடையில் வந்த பரிசுகளைப் பெற்ற மாணவர்கள் விஜய்யுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு சந்தோசமாகச் சென்றனர். வந்தவர்களில் ஒரு சிறுவன் ஸ்டைலான வித்தைக் காட்டி விஜய்யின் கவனத்தை ஈர்த்தார். அவரைப் போலவே ஸ்டைலாக நடந்து வந்து 2 கராத்தே ஸ்டெப் போட்டு காலைத் தொட்டு எழுந்தான் அந்தச் சிறுவன். அவனை விஜய் கட்டியணைத்து சிரித்தார். இளம் சிறுவனின் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
Rolex Chooses Violence
— VijayAlif 𝕁𝕕🕶️ (@VijayAlif5) June 17, 2023
Thalapathy Reaction 😂😂😭🔥#Leo #VIJAYHonorsStudents pic.twitter.com/6CPdFiv6xT