சமூக வலைத்தளத்தை திறந்தாலே நடிகர் விஜய் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சியும் அதில் மாணவர்கள் விஜய்யிடம் செய்து சேட்டையும் தான் ஆக்கிரமித்து இருக்கிறது. சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விஜய் கொஞ்சம் கூட மாணவர்களிடம் கடிந்து கூட நடந்து கொள்ளவில்லை.
இதனால் பலரும் விஜய்யை பாராட்டி வருகின்றனர் இந்த நிலையில் லியோ தொடர்பான ஒரு அப்டேட் அண்மையில் வெளியானது. அதில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக லியோ படத்தின் முதல் பாடலை பட குழு வெளியிடுகிறது.
இந்தப் பாட்டிற்கு ஆல்டர் ஈகோ நான் ரெடி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அனிருத் தன்னுடைய துள்ளலான இசையில் இந்த பாடலை அமைத்திருக்கிறார்.இந்த நிலையில் இந்த முதல் பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் லலித் குமார் அனைவருமே துள்ளல் நடனம் ஆடும் வகையில் நான் ரெடி பாடல் அமைந்திருக்கிறது.
இதில் நடிகர் விஜய்யின் நடனத்தை பார்த்தால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். இந்த பாடல் சிறப்பாக வந்திருக்கிறது.வாத்தி கம்மிங் பாடல் எப்படி நாடு தளவிய அளவில் ஹிட்டானதோ, அதே போன்று நான் ரெடி பாடலும் சூப்பர் ஹிட் ஆகும். அதற்கு நடிகர் விஜயின் நடனம் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.
இந்தப் பாடலில் நீங்கள் ஒரு இளமையான நடிகர் விஜய்யை பார்ப்பீர்கள். நடிகர் விஜய்க்கு பத்து வயது குறைவாக இந்த பாடலில் இருப்பது போல் தோன்றுவார். இந்தப் பாடல் மொத்தம் எட்டு நாட்கள் எடுக்க திட்டமிட்டிருந்தோம். 2000 நடன கலைஞர்கள் ஆடுவதால் அவர்களுக்கு சம்பளம் என ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் செலவானது.
இதை அறிந்ததும் நடிகர் விஜய் இந்த பாடலை ஏழு நாட்களுக்குள் எடுத்து முடித்து விடுங்கள்.அதற்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்கிறேன் என்று நடிகர் விஜய் நடன இயக்குனரிடம் கூறியிருக்கிறார். இதனால் பாடல் படப்பிடிப்பை ஏழு நாட்களில் முடித்து விட்டோம். இதன் மூலம் எனக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மிச்சமானது. நடிகர் விஜய் எப்போதுமே தயாரிப்பாளர்களின் நடிகராக தான் இருப்பார் என்று லலித் கூறியுள்ளார்.