ஓம் ராவுத் இயக்கத்தில் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஆதிபுருஷ். ராமாணயக் காவியத்தைக் கதையாகக் கொண்ட இத்திரைப்படம் 500 – 600 கோடி எனும் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. போட்ட பணத்தை நல்ல வசூல் மூலமாக பெற்றும் வருகின்றனர்.
இத்திரைப்படத்திற்கு துவக்கம் முதலே சமூக வலைதளங்களில் கிண்டல்கள், கேலிகள் தான். முதன் முதலில் வெளியான டீசரில் வி.எப்.எக்ஸ் காட்சிகளை நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து தள்ளினர். உடனே ரீலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டு மீண்டும் வி.எப்.எக்ஸ் பணிகளை கூடுதல் பணம் செலவிட்டு சரி செய்தப் பின்னரே திரையரங்கில் தற்போது வெளியிட்டுள்ளனர்.
ஹனுமானுக்கு திரையரங்கில் ஓர் சீட் என்பதன் மூலம் ஏகப்பட்ட கேலிகள் குவுந்தாலும் ஒருவகையில் அது புரொமோஷன் போல பயனானது. படம் சிறப்பாக ஓடி நல்ல லாபத்தை திரட்டி வருகிறது. 2023 முதல் நாள் வசூலில் பத்தான் படத்தைத் தாண்டி பல்வேறு சாதனைகள் படைத்துக் கொண்டுள்ளது.
இருப்பினும் ஆதிபுருஷ் படத்தை ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்கள் கலாய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் பெரும்பான்மையானோர் வி.எப்.எக்ஸ் காட்சிகளையும் படத்தில் இடம்பெற்றிருக்கும் சில வசனங்களையும் குற்றம் சாட்டுகிறார்கள். வசனங்கள் குறித்து படக்குழு விரைந்து முடிவெடுத்துள்ளது.
சில இடங்களில் வரும் வசனங்கள் பார்வையாளர்களுக்கு எமோஷன் தராததால் அவற்றைப் படக்குழு கருத்தில் கொண்டு மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. 2 தினங்களில் அனைத்து திரையரங்கிலும் மாற்றப்பட்ட புதிய ஆதிபுருஷ் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து படத்தின் எழுத்தாளர் மனோஜ் கூறியதாவது, “ இராமாயணக் கதையை பாட்டி சொல்லும் போது எந்த வகையான வசனங்கள் இருக்குமோ அதே போலத் தான் நாம் எழுத்திட்டேன். பல்வேறு எழுத்தாளர்களும் அதே பாணியைத் தான் பின்பற்றுவார்கள். எனினும் பார்வையாளர்களை முக்கியம் அதனால் அவர்கள் விரும்பும் வகையில் விரைவில் மாற்றி அமைக்கிறோம்.