Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது எப்படி? அவமானங்கள் நிறைந்த பாதை

விஜய் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது எப்படி? அவமானங்கள் நிறைந்த பாதை

தமிழ் சினிமாவில் தற்போது அதிக வசூலை குவிக்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். விஜய் படத்தை வாங்கிய விநியோஸ்தர்களும் அதனை தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் படத்தை வெளியிடும் திரையரங்கு உரிமையாளர்களும் சொல்லும் ஒரே வார்த்தை, விஜய் படம் வந்தால் மட்டுமே எங்களுக்கு நஷ்டம் ஏற்படுவது இல்லை என்பதுதான்.

- Advertisement -

சாதாரண நடிகராக இருந்த விஜய் எப்படி நம்பர் ஒன் இடத்திற்கு வந்தார் என்பதை தற்போது பார்க்கலாம். அஜித் போன்ற அழகு நிறம் என எதுவும் விஜய்க்கு கிடையாது. இது எல்லாம் அவருக்கு மைனஸ் பாயிண்டாக தான் இருந்தது. ஆனால் எதையெல்லாம் தமக்கு மைனஸ் பாயிண்டாக இருந்ததோ அதை எல்லாம் பிளஸ் பாயிண்ட் ஆக மாற்றி இருக்கிறார் விஜய். சொல்லப்போனால் நம்ம பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்கிறார் என்று நினைப்பை ரசிகர்கள் மத்தியில் பதிய வைத்தார்.

- Advertisement -

- Advertisement -

குடும்ப படங்கள்

அதன் பிறகு பெண்கள் ரசிகர்களை பெறும் விதமாக படங்களை நடித்தார். இதன் ஒரு பகுதியாக இவர் நடித்த பூவே உனக்காக திரைப்படம். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் விஜயை கொண்டு சென்றது. அதன் பிறகு காதலுக்கு மரியாதை என்ற திரைப்படம் விஜய் இளைஞர்கள் மத்தியில் ஹீரோ ஆக்கியது.

ஒரு விஷயத்தில் நாம் சின்சியராக இருந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு நடிகர் விஜய் ஒரு உதாரணம். தாம் தேர்ந்தெடுத்த சினிமாவில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்ற வெறியுடன் விஜய் ஓடிக்கொண்டே இருந்தார். துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே குஷி போன்ற திரைப்படங்கள் விஜய்க்கு பெரிய வெற்றிகளை பெற்றுத் தந்தது.

ஆக்சன் ஹீரோ

ஒரு நடிகர் காலத்தால் அழியாமல் இருக்க வேண்டும் என்றால் அவர் ஆக்ஷன் ஹீரோவாக இருந்தால் மட்டுமே முடியும் என்பதை எம்ஜிஆர், ரஜினி, விஜயகாந்த் ஆகியோர் மூலம் நடிகர் விஜய் உணர்ந்தார். இதனால் தனது படங்களில் மெதுமெதுவாக சண்டைக் காட்சிகளை புகுத்த விஜய் ஒரு கட்டத்தில் முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.

இதில் பகவதி அவருக்கு கொஞ்சம் சறுக்களை கொடுத்தாலும் நமக்கு ஆக்ஷன் வரும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. இதன் பிறகு திருமலை, கில்லி போன்ற திரைப்படங்கள் நடிகர் விஜய் ரஜினிக்கு அடுத்தது இவர்தான் என்ற லெவலுக்கு கொண்டு சென்றது. மக்களின் பல்ஸை நன்கு தெரிந்து கொண்டிருந்த விஜய் திருப்பாச்சி என்ற அண்ணன் தங்கை பாசம் படத்தை மையமாக வைத்து நடித்தார்.

அதன் பிறகு சிவகாசி போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களை குவித்த நிலையில் போக்கிரி விஜய்க்கு ஆக்ஷன் ஹீரோ என்ற சிம்மாசனத்தை கொடுத்தது. எவ்வளவு உயரப் பறந்தாலும் சறுக்கல் என்பது நிச்சயம் இருக்கும். அதற்கு விஜயும் விதிவிலக்கு அல்ல. தமிழ் சினிமா வேறு ஒரு கட்டத்திற்கு சென்று கொண்டிருந்த நிலையில் விஜய் தொடர்ந்து ஒரே மாதிரி நடித்து வருகிறார் என்ற பெயர் அவருக்கு வந்தது.

சரிவு

மேலும் அழகிய தமிழ் மகன், வில்லு, குருவி, என அடுத்தடுத்து விஜய்க்கு தோல்வி படங்களாக அமைந்தது இதில் விஜயின் 50வது திரைப்படமான சுறா படுதோல்வியை தழுவியது. இதனால் விஜய் அவ்வளவுதான் என அனைவரும் நினைத்தார்கள். எப்போதுமே நமக்கு கஷ்டங்கள் வரும் அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதில்தான் வாழ்க்கையே இருக்கிறது.

அந்த வகையில் நடிகர் விஜய் தன்னுடைய பாதையை மாற்றினார். இயக்குனர்கள் கையில் தான் இனி தமிழ் சினிமா இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு நமக்கு எது சரியாக வரும் என்பதை தெரிந்து கொண்டார். முதலில் காவலன் என்று தன்னுடைய பழைய ஸ்டைலில் ஒரு படத்தை கொடுத்தார்.

எழுச்சி

அது மக்கள் மத்தியில் விஜயை மீண்டும் கொண்டு சேர்த்தது. அதன் பிறகு யாருமே எதிர்பார்க்காத வகையில் துப்பாக்கி என்ற படத்தில் நடித்த அது நடிகர் விஜய்க்கு முதல் 100 கோடி ரூபாய் வசூல் என்ற பட்டத்தை கொடுத்தது. அதன் பிறகு விஜய்க்கு ஏறுமுகமாகவே அமைந்தது. கத்தி, தெறி, மெர்சல், சர்க்கார், பிகில் என தொடர்ந்து வெற்றி  இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு நடிகர் விஜய் தனக்கென்று ஒரு ரூட்டை பிடித்தார். அது இன்றுவரை நடிகர் விஜய்க்கு ஒரு நல்ல பெயரை கொடுத்து வருகிறது.

விஜய்யின் வெற்றி

எந்தெந்த இயக்குனர் எல்லாம் நன்றாக பணியாற்றுகிறார். அவரிடம் சரக்கு இருக்கிறது என்பதை விஜய் கண்டுபிடிக்கிறாரோ அவர்களுக்கு வாய்ப்பை கொடுக்கிறார். அந்த வகையில் தான் லோகேஷ் கனகராஜ், அட்லி போன்ற இயக்குனர்கள் விஜயுடன் படம் செய்ய தொடங்கினர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக கூறி சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது தமிழக மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. மேலும் ஒரு கட்சி சார்பாக நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துக்கள் அவருடைய சினிமா வாழ்க்கையும் பாதித்தது. இதனால் நடிகர் ரஜினியின் திரைப்படங்கள் வசூல் குறைய தொடங்கிய நிலையில் அந்த இடம் விஜய்க்கு தன்னாலே வந்துவிட்டது.

கடும் உழைப்பு அவமானங்கள் என அனைத்தையும் தாண்டி நடிகர் விஜய் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவை இந்திய முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற அவருடைய அடுத்த ஆசை. அது லியோ மூலம் நிறைவேற வேண்டும் என்று நமது பில்டர் சினிமா குழு சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

Most Popular