Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாஅஜித் ரசிகர்கள் பாவம்.. மீண்டும் தள்ளிப் போகும் விடாமுயற்சி..காரணம் என்ன?

அஜித் ரசிகர்கள் பாவம்.. மீண்டும் தள்ளிப் போகும் விடாமுயற்சி..காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித் கடந்த ஜனவரி மாதம் துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் திரைக்கு வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் விஜய் தனது அடுத்த திரைப்படமான லியோவையும் முடித்துவிட்டு 68வது திரைப்படத்திற்கான வேலைகளையும் தொடங்கி விட்டார். ஆனால் நடிகர் அஜித் இன்னும் அடுத்த பட வேலைகள் குறித்து இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.

தள்ளிப் போகும் ஷூட்டிங்

முதலில் விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவதாக இருந்தது அதன் பிறகு அவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் மகிழ் திருமேனி புதிய படத்தை இயக்குவதாக இருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் அஜித்தின் தந்தை ஏப்ரல் மாதத்தில் காலமானார்.

- Advertisement -

பிறகு மே மாதம் இறுதியில் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் அஜித் திடீரென்று பைக்கை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விட்டார். அதன் பிறகு ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்போதும் ஷூட்டிங் தொடங்கவில்லை.

- Advertisement -

வெளிநாடு சென்ற படக்குழு

ஆனால் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நடிகர் அஜித்தும் இயக்குனர் மகிழ் திருமேனியும் வெளிநாடு சென்று படத்தின் கெட்டப் குறித்து முடிவு செய்வதற்காக போனார்கள் என்று செய்தி வெளியானது. இதனால் விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மீண்டும் தாமதம்

ஆனால் இன்றுவரை அதற்கான ஆரம்பப் பணிகள் ஏதும் செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்படலாம் என தெரிகிறது. இந்த தாமதத்திற்கு காரணம் இயக்குனர் மகிழ் திரு மேனி திரைக்கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அவசரம் அவசரமாக கதை எழுதியதாகவும் தற்போது அந்த கதையை மெருகேற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தமக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நாள் விடா முயற்சி திரைப்படம் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது.

Most Popular