Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமா24 மணி நேரத்தில் இத்தனை பார்வையாளர்களா? நான் ரெடி படத்தின் சாதனை

24 மணி நேரத்தில் இத்தனை பார்வையாளர்களா? நான் ரெடி படத்தின் சாதனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆரோக்கியத்தை பெருக்கிக் கொண்டே போகிறது. கடந்த 22ஆம் தேதி தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்படத்தின் உடைய ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்தின் உடைய முதல் பாடலும் இணையத்தில் வெளியிடப்பட்டது .நான் ரெடி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே ஒரு எதிர்பார்ப்போடு இருந்தது.

நான் ரெடி பாடல்

ஏனெனில் லோகேஷ் கனகராஜ் 2000 நடன என இயக்குனர்களை வைத்து ஒரு பாடலை இயக்கி வருகிறார் என்ற தகவல் பரவி வந்தது. இந்தப் பாடல் தான் திரைப்படத்தின் முதல் பாடலாக தற்பொழுது நான் ரெடி தான் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது.

- Advertisement -

சாதனை

இந்தப் பாடல் வெளியிடப்பட்டு 24மணி நேரத்திற்குள் 16 மில்லியன் வியூசை பெற்று சாதனை படைத்திருக்கிறது. மேலும் இத்திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பே ரீபிஸினஸிலேயே 400 கோடி ரூபாய் பெற்று திரையரங்கில் வெளியிடப்படுவதற்கு முன்பு போட்ட பட்ஜெட்டை எடுத்து இருக்கிறது லியோ திரைப்படம்.

- Advertisement -

விமர்சனம்

இந்தப் பாடலின் மீது எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு வெளியிடப்பட்டதோ அந்த அளவிற்கு விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. இந்தப் பாடலில் தளபதி விஜய் சிகரெட் பிடிப்பது போல் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் செங்கலில் கூட தளபதி விஜய் சிகரெட் உடன் எடுப்பது போல் தான் வெளியிடப்பட்டிருக்கிறது.அரசியலுக்கு வர விரும்பும் ஒரு நடிகர் இதுபோன்ற காட்சிகளின் நடிப்பது சரியல்ல என்று விமர்சனம் எழுந்திருக்கிறது.

மாஸ்டர்

இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார். திரைப்படத்தில் கூட ஆரம்பத்தில் தளபதி விஜய் ஒரு குடிகாரராக நடித்திருப்பார். அதுவும் கல்லூரி ஆசிரியராக இருந்து கொண்டு கல்லூரிக்கு குடித்துவிட்டு வருவது போன்று எல்லாம் காட்சிகள் இருக்கும்.

அதன் பிறகு அவர் ஒரு நல்ல ஆசிரியராக மாறி பலருக்கு நன்மை செய்வதுபோல திரைப்படம் அமைந்திருக்கும். அது போன்று கூட லியோ திரைப்படத்தில் காட்சிகள் அமைந்திருக்கலாம் ஒரே ஒரு பாடலை மட்டும் வைத்து மொத்த திரைப்படத்தையும் கணித்து விட முடியாது தற்பொழுது எழுந்திருக்கும் இந்த விமர்சனம் தேவையற்றது.

இது போன்ற விமர்சனத்திற்கு எல்லாம் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட பிறகு தெளிவு கிடைக்கும்.வருகின்ற அக்டோபர் மாதம் 12ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது.

இதன் காரணத்தினால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தின் கடைப்பிடிப்பு விரைவாக நடத்தி வருகிறார். ஏறத்தாழை திரைப்படம் தற்பொழுது இறுதி கட்டத்தை அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Most Popular