தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களின் முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் 80ஸ்களின் பிரபல நடிகையான மேகனா சுரேஷ் மகள் ஆவார்.
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார். மேகனா சுரேஷின் மகள் என்று அறிமுகமான நடிகை கீர்த்தி. சுரேஷ் தற்பொழுது சினிமாவில் அவருக்கென்றே ஒரு தனி இடம் கிடைக்கும் அளவிற்கு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.
அவருடைய இயல்பான நடிப்பு ரசிகர்கள் மத்தியில அவருக்கு பெரும் இடத்தை பிடித்துக் கொடுத்திருக்கிறது. மேலும் இவர் நடித்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி என்ற திரைப்படம் அவர் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது அவரை ஒரு சிறந்த நடிகையாகவும் அடையாளம் காட்டியது.
பெரிய ஹீரோ படங்கள்
இதற்குப் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய் உடன் பைரவா திரைப்படத்தில் நடித்த அந்த திரைப்படத்திலும் அவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து இறுதியாக இவர் நடித்த அண்ணாத்தை திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷ் அந்தத் திரைப்படமும் அதில் உள்ள கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் ரீச் ஆகவில்லை.
தவறிபோன வாய்ப்பு
இயக்குனர் மணிரத்தினத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவருக்கு சமுத்திரகுமாரியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அண்ணாத்தை திரைப்படத்தில் கவனம் செலுத்தி வந்ததால் அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கிடைத்த வாய்ப்பை கூட தவறவிட்டார்.
மாமன்னன்
இதற்குப் பிறகு சில நாட்களாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. இதைத்தொடர்ந்து அவர் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தினுடைய பிரமோஷன் இருக்காங்க பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
கமர்சியல் படங்கள்
நடிகை கீர்த்தி சுரேஷ் அதில் ஒரு பேட்டியில் எனக்கு பொதுவாக கமர்சியல் திரைப்படங்கள் நடிப்பதற்கு தான் பிடிக்கும் மகாநதி போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிப்பதை விட நான் கமர்சியல் திரைப்படங்களை விரும்புகிறேன்.
இதன் காரணத்தினால் மகாநதி திரைப்படத்திற்கு பிறகு ஆறு மாதம் எந்தவிதமான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களையும் ஏற்காமல் தவிர்த்து வந்தேன் என்று கூறினார். அந்த சமயத்தில் எனக்கு பொருளாதார ரீதியாகவும் தேவை ஏற்பட்டது. இதனால் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களின் நடிக்கும் கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன் என்றும் கூறினார்.
காதல் கடிதம்
தற்பொழுது மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். ஒருவருடன் இருந்து அடிக்கடி காதல் கடிதம் வரும் அதுவும் முகவரியுடன் பெயருடன் தெளிவாகவே வரும். ஆனால் அவருக்கு நான் எந்த பதிலும் அனுப்புவது இல்லை. அவர் அந்த பதிலை எதிர்பார்ப்பார் என்று கூறியிருந்தார்.
உதயநதியுடன் நடித்ததற்கு எதிர்ப்பு
இன்னும் ஒருவர் ஒரு படி மேலே சென்று என் வீடு தேடியே வர ஆரம்பித்து விட்டார். அவர் வரும் சமயத்தில் நான் என் வீட்டில் இல்லை. என்னுடைய வீட்டு வேலையால் இடம் அவள் எதற்காக உதயநிதியுடன் எல்லாம் நடிக்கிறார் என்றெல்லாம் கூறி இருக்கிறார் .மேலும் கேரளாவில் இருக்கும் என்னுடைய தாய் தந்தையிடம் சென்றெல்லாம் பேச முயற்சி செய்திருக்கிறார் என்று கூறியிருந்தார். இதைப் பற்றி நான் உதயநிதி இல்லன்னு கூட கூறியிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.