Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாஅஜித்தின் துணிவு வசூலை மிஞ்சிய போர் தொழில்.. ! அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

அஜித்தின் துணிவு வசூலை மிஞ்சிய போர் தொழில்.. ! அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான கிரைம் திரில்லர் திரைப்படம் போர் தொழில். ப்ரிவ்வியூ காட்சிகள் மற்றும் ப்ளூ சட்டை உட்பட பல்வேறு சினிமா விமர்சகர்களும் பெரிதாக பாராட்டினர். அதனைத் தொடர்ந்து மூன்று வாரங்கள் கடந்து இன்னும் நல்ல கூட்டத்தைப் பெற்று வருகிறது.

- Advertisement -

சரத்குமார் – அசோக் செல்வன் முன்னணி நடிகர்களாக வரும் இந்த படம் முழுக்க முழுக்க சைக்கோ கொலையாளியை கண்டு பிடிப்பதிலேயே சுற்றும். இருவரின் ஒன்றாக நடிப்பது இதுவே முதல் முறை. முதல் சந்திப்பிலேயே ரசிகர்களை பிடித்துவிட்டனர். இவர்களின் நடிப்பைத் தாண்டி படத்தை சிறப்பு மிக்கதாக ஆகிய ஒன்று திரைக்தை. பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைத்தனர்.

2023இல் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தமிழில் அதிக வசூல் செய்த படம் அடுத்தடுத்த இடங்களில் அதனைத் தொடர்ந்து டாடா, வாத்தி, அயோத்தி, விடுதலை, குட் நைட், பொன்னியின் செல்வன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் சென்ற மாதம் வரை அடுத்தடுத்த இடங்களில் இருந்தன.

- Advertisement -

போர் தொழில் அந்த வரிசையில் தனக்குச் சொந்தமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன், விடுதலை, பத்து தல போன்ற படங்களை விட போன்ற சின்ன சின்ன படங்களான குட் நைட், டாடா, அயோத்தி, போர் தொழில் போன்றவை சிறப்புதுள்ளது.

- Advertisement -

துணிவு படத்தை தாண்டிய போர் தொழில்

துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல லாபத்தைப் பார்த்தது. கேரளா, ஆந்திரா போன்ற சில மாநிலங்களில் வாரிசு அளவிற்கு செய்யவில்லை. மிக முக்கியமாக கேரளாவில் துணிவை விட பெரிய மடங்கில் வாரிசு வசூல் செய்தது. காரணம் ? கேரளாவில் விஜய்யின் ஆதிக்கம் பற்றி அனைவரும் அறிவோம் !

இருப்பினும் அங்கு 5 கோடி வசூலை அள்ளியது அஜதின் துணிவு திரைப்படம். வாரிசைத் தொடர்ந்து தற்போது போர் தொழில் திரைப்படம் கேரளாவில் துணிவு படத்தின் வசூலை முறியடித்துள்ளது. இதுவரை போர் தொழில் திரைப்படம் 5.5 கோடிக்கு மேல் அங்கு வசூல் செய்துள்ளது. இன்னும் ஒன்று அல்ல இரண்டு வாரங்கள் தாராளமாக ஒடுமென்பதால் 6.5 கொடி வரை எதிர்பார்க்கலாம்.

Most Popular