இயக்குனர் மாரி செல்வராஜ் முதன்முதலில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் கதிர் மற்றும் ஆனந்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இதைத்தொடர்ந்து தற்பொழுது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது ஜூன் முதல் வாரத்தில் திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்படத்தின் உடைய இயக்குனரான மாரி செல்வராஜ் ஜாதியை பற்றி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தேவர்மகன் திரைப்படத்தின் போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்ற பாடலின் வரிகள் தேவர் ஜாதியில் உள்ளவர்களை அவர்களே பெரியவர்கள் என்று நினைக்கும் அளவிற்கு அமைந்திருந்தது. அவர்களின் ஆணவத்தை தூண்டியது என்பது போல் அமைந்திருந்தது. தற்பொழுது மாரி செல்வராஜ் இருக்கும் இந்த மாமன்னன் திரைப்படம் தேவர்மகன் திரைப்படத்திற்கு எதிரானது என்று அவர் பேசியிருந்தது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
மேலும் தேவர் மகன் திரைப்படத்தின் கதையை 7 நாட்களில் எழுதி முடித்த உலக நாயகன் கமலஹாசன் திரைப்படத்தின் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அவருடைய முன்னிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படி பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
அப்படி தேவர்மகன் திரைப்படத்திற்கு எதிராக என்னதான் இந்த மாமன்னன் திரைப்படத்தில் இவர் இயக்கி இருக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. அதை பார்த்து ரசிப்பதற்காக இருப்பதைவிட விமர்சிப்பதற்காகவே அதிகம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த திரைப்படம் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பு நல்லா அபிப்பிராயத்துடன் எதிர்பார்க்கப்பட்டது. தற்பொழுது திரைப்படத்தின் மீது பலரும் ஆத்திரத்துடன் இருக்கிறார்கள்.
இதை கண்டிக்கும் வகையில் இயக்குனர் பேரரசு ஒரு கவிதையை பதிவிட்டு இருக்கிறார். நம் ஊர்களில் ஐயர் ஹோட்டல், நாடார் கடை ,செட்டியார் மேல் என்றெல்லாம் அழைப்பதுண்டு அப்போது எந்த பிரச்சனையும் இல்லை என்று பேரரசு குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல் வரலாறுகள் படிக்கும் பொழுது வ உ சிதம்பரம் பிள்ளை, முத்து ராமலிங்க தேவர், சரோஜினி நாயுடு,ராமசாமி படையாட்சி உ வே சுவாமிநாத ஐயர் என்றெல்லாம் படித்திருக்கிறோம். அப்பொழுதும் எந்த பிரச்சனையும் இல்லை.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற வரியையே கோனார் என்ற தமிழுறையில் தான் படித்திருக்கிறோம் அப்பொழுதெல்லாம். எந்தவிதமும் தோன்றவில்லை என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ஏவிஎம் மெயப்ப செட்டியார் ,வாகினி நாகிரெட்டி, தேவர் ஃபிலிம், சின்னப்ப தேவர் போன்று தயாரிப்பாளர்களை ஜாதியை சொல்லி அழைத்தார்கள் அப்பொழுதெல்லாம் எந்த பிரச்சனையும் வரவில்லை என்றும்
குறத்தி மகன், தேவர்மகன், சின்ன கவுண்டர், ஐயர் தி கிரேட் என்றெல்லாம் படத்தின் பெயர்களை வைத்தார்கள் அப்பொழுதெல்லாம் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்று கூறி இப்பொழுது எங்கிருந்து வந்தது ஜாதி பிரச்சனை அதற்கு யார் காரணம் ஒரு கேள்வியை முன் வைத்திருக்கிறார்.
ஜாதி மதம் எல்லாவற்றையும் மறந்து நான் ஒரு கலைஞன் என்று தன்னை அர்ப்பணித்து எத்தனையோ கலைஞர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிடம் ஜாதியை வித்திட்டவர்கள் யார் என்ற கேள்வியும் இயக்குனர் பேரரசு கேட்கிறார்.
அதே சமயம் இப்பொழுதும் நம்முடன் வேலை செய்பவர்களிடம் யாரும் ஜாதியை கேட்டு பழகுவதில்லை. அந்த ஒரு செயலையும் செய்ய தூண்டி விடாதீர்கள் என்று பேரரசு குறிப்பிட்டுள்ளார்.
வாய்ப்பு கேட்பவனிடம் எவன் ஜாதியை கேட்கிறானோ அவன் மனித பிழை என்றும் ஜாதிப்பற்று மனித இயல்பு ஜாதி வெறி மனிதனின் அழிவு என்று கூறி தன்னுடைய கவிதையை முடித்து இருக்கிறார் இயக்குனர் பேரரசு.