தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அஜித் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் கூட அவருடைய படங்கள் தொடர்ந்து ஃப்ளாப் ஆனாலும் கூட அவருக்கு என இருக்கும் ரசிகர்கள் என்றுமே குறைந்தது கிடையாது.
இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படம் தொடர்பான வேலை இன்னும் தொடங்கப்படவில்லை. ஷூட்டிங் எப்போது நடைபெறும் என ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
அதற்குள் நடிகர் அஜித் பைக் உலக சுற்றுப்பயணம் மற்றும் பைக் பயணத்திற்கான ஒரு நிறுவனம் என பல வேலைகளை முடித்திருக்கிறார். தற்போது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார்.
இதற்காக வெளிநாடு சென்றுள்ள அஜித் விடாமுயற்சி படத்திற்கு எந்த லுக்கை வைக்க வேண்டும் என்பதற்காக நடிகர் அஜித் அங்கு பணியில் ஈடுபட்டு இருக்கிறார். துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் உடன் கொஞ்சம் பருமனாக மாறிவிட்டது.
இதனால் மீண்டும் உடல் எடையை குறைக்கும் பணியில் நடிகர் அஜித் ஈடுபட்டிருக்கிறார். அதற்கென்று மிகவும் ஒல்லியாக இல்லாமல் திட்டமான அளவில் உடலை அஜித் குறைத்து இருக்கிறார்.தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் துணிவு திரைப்படத்திற்கு அஜித் வித்தியாசமான முறையில் தாடி ஹேர் ஸ்டைல் வைத்திருந்தார். அதேபோன்று விடாமுயற்சி படத்திலும் வித்தியாசமான லுக்கில் தான் நடிகர் அஜித் இருப்பார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே துணிவு திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக இருக்கும் என தயாரிப்பாளர் கூறி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடா முயற்சி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.