Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாகுஷ்பு நோ சொல்லி இருந்தால், இந்த நடிகையை திருமணம் செய்திருப்பேன்.. இயக்குனர் சுந்தர்.சி

குஷ்பு நோ சொல்லி இருந்தால், இந்த நடிகையை திருமணம் செய்திருப்பேன்.. இயக்குனர் சுந்தர்.சி

தமிழ் சினிமாவில் எப்போதும் ஜெனரஞ்சகமான திரைப்படத்தை இயக்குபவர் சுந்தர் சி. சுந்தர் சி இதுவரை 37 படங்களை இயக்கி இருக்கிறார்.  இதில் பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக அருணாச்சலம், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, வின்னர்,கிரி, அரண்மனை, அன்பே சிவம் போன்ற ரசிகர்கள் மனதை கவர்ந்த பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

- Advertisement -

எனினும் சுந்தர் சி இத்தனை சினிமா வாழ்க்கையில் சாதித்தாலும் அவருடைய மிகப்பெரிய சாதனை எது என்று கேட்டால் குஷ்பூவை திருமணம் செய்தது தான். ஏனென்றால் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கொடிக் கட்டிப் பறந்த குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது வரை ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பேட்டி ஒன்று நடிகை குஷ்பூவை தாம் எப்படி திருமணம் செய்து கொண்டேன் என்பது குறித்து சுந்தர் சி கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து ஜாலியாக பேசிய சுந்தர் சி தான் ஒரு இயக்குனர் என்பதால் நடிகையை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

ஏனென்றால் ஒரு நடிகைக்கு இயக்குனரின் வேலை தெரியும். அப்போது என் கண் முன்னால் இரண்டு நடிகைகள் தான் தெரிந்தார்கள். இந்த இரண்டு பேருக்கும் நமது காதலை சொல்வோம். அதில் யார் ஓகே சொல்லுகிறார்களோ அவர்களை திருமணம் செய்து கொள்வோம் என்று தான் நினைத்தேன்.

- Advertisement -

அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் குஷ்பூ. இரண்டாவது இடத்தில் இருந்தவர் நடிகை சௌந்தர்யா. நல்ல வேலையாக நான் குஷ்பூ விடும் முதலில் போய் தயங்கி தான் எனது காதலை சொன்னேன். அவரும் உடனே ஓகே என்று சொல்லிவிட்டார்.

இதனால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஒருவேளை குஷ்பூ நோ சொல்லியிருந்தால் நான் நேரடியாக சௌந்தர்யா வீட்டிற்கு சென்று அவரை ப்ரபோஸ் செய்திருப்பேன் என்று சுந்தர் சி காமெடியாக கூறியுள்ளார். இவ்வளவு வெளிப்படை தன்மையாக சுந்தர் சி உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

மேலும் சிலர் சுந்தர் சி போல் தைரியமாக தமக்கு பிடித்த பெண்ணிடம் போய் தமது காதலை சொல்ல வேண்டும். தயங்கி தயங்கி நின்று விடக்கூடாது என்றும் சுந்தர் சி இடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.

Most Popular