தற்போது கோலிவுட் சினிமாவின் உச்சத்தில் அமர்ந்து இருப்பவர் தளபதி விஜய். அவர் நடிக்கும் படத்தின் விமர்சனம் சுமாராக இருந்தாலும் 100 கோடி வசூலைச் சுலபமாக பெறுகிறது அதற்கு சிறந்த உதாரணம் வாரிசு. அப்படத்திற்குப் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் கைக் கோர்த்துள்ளார்.
லியோ திரைப்படம்
படத்தின் அறிவிப்பின் போதே ரீலீஸ் தேதியை குறிப்பிட்டதால் அதற்கேற்றவாறு விரைந்து செயல்பட்டது லோகேஷ் கனகராஜ் & கோ. காஷ்மீர், ஊட்டி, சென்னை என அடுத்தடுத்து படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. நடிகர் விஜயின் காட்சிகள் இன்றுடன் நிறைவடைந்து விட்டதாகவும் ஒட்டுமொத்த படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் 1 வாரத்தில் முடிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தளபதி 68
இப்படத்திற்குப் பின் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இந்தப் படத்தின் அறிவிப்பை தவிர வேறு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆகஸ்ட் மாதம் முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கவிருகிறது. அதற்கான பணிகளை இயக்குனர் வெங்கட் பிரபு தயார் செய்தும் வருகிறார்.
விஜய்யின் கடைசி படம்
வெங்கட் பிரபுவுடனான படமே விஜய்யின் கடைசிப் படம் எனும் செய்தி சமீபத்தில் தீயாய்ப் பரவியது. காரணம் அரசியலில் விஜய் குதிக்கவிருப்பதாக குறிப்பிடுகிறார்கள். மேலும் அந்தச் செய்திகளை உண்மையாக்கும் வகையிலேயே விஜய்யின் நடத்தையும் தென்படுவதாக ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
அண்மையில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி மக்களின் பாராட்டுகளைப் பெற்றார் விஜய். மேலும் அந்த நிகழ்ச்சியில் அவரின் பேச்சும் சக உறுப்பினர்களின் வார்த்தைகளும் விஜய்யை அரசியல் வாழ்க்கைப் பற்றே இருந்தது. அதோடு அவரின் பிறந்தநாளுக்கு தமிழகம் முழுவதும் விஜய்யின் அரசியல் ஆசைப் குறித்தே இருந்தது.
விஜய் தரப்பில் பதில்
இதையெல்லாம் வைத்து அவர் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்கின்றனர். 2026 தேர்தலை கருத்தில் கொண்டு தளபதி 68 படத்திற்குப் பின் முழு நேர அரசியலை கையில் எடுக்கவிருப்பது அதிகாரபூர்வமானது என்று பலர் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அதை விஜய் தரப்பில் இருந்து மறுத்துள்ளனர். அவர் அரசியலில் களமிறங்குவது உறுதியானாலும் படத்தை கைவிடுவார் என தோன்றவில்லை.