Monday, May 20, 2024
- Advertisement -
Homeசினிமாலோகேஷ் கனகராஜ் சொன்ன யோசனை.. நிராகரித்த மாவீரன் இயக்குனர்

லோகேஷ் கனகராஜ் சொன்ன யோசனை.. நிராகரித்த மாவீரன் இயக்குனர்

மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆரம்பத்தில் ஒரு சாதாரண தொகுப்பாளராக இருந்து பின் நடிகராகி தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக மின்னிக் கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

இவருடைய நடிப்பிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள் நகைச்சுவையும் எதார்த்தமும் நிறைந்த இவருடைய நடிப்பை ரசிக்காதவர்களே இல்லை. அப்படிப்பட்ட சிவகார்த்திகேயன் சீரியஸான கேரக்டரில் நடித்த டாக்டர் திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெருமளவில் வெற்றியடைந்தது .அதற்குப் பிறகுதான் அவருக்கு நகைச்சுவை மட்டும் அல்ல சீரியஸான கேரக்டரும் செட் ஆகும் என்று பலரும் தெரிந்து கொண்டார்கள்.

அதைத்தொடர்ந்து வெளிவந்த டான் திரைப்படமும் பெரும் அளவில் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படங்களுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வந்த பிரின்ஸ் திரைப்படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைந்திருந்தது. ஆனால் திரைப்படம் சற்று எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. இதன் காரணத்தினால் கூடுதல் பொறுப்புடன் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

இந்தத் திரைப்படம் வருகின்ற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் இடம் இயக்குனர் மடோன் அஸ்வின் மாவீரன் திரைப்படத்தின் உடைய ஸ்கிரிப்ட் படிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

- Advertisement -

ஆனால் அவர் லியோ திரைப்படத்தின் வேலைகளில் ஈடுபாடுடன் இருப்பதால் அதற்கான நேரம் கிடைக்காத காரணத்தால் அவர் அத ஸ்கிரிப்ட் படிக்கவில்லை.

இருந்த போதிலும் தான் இயக்கிய இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியாவது பார் என்று மாவீரன் திரைப்படத்தின் ஒரு காட்சியை லோகேஷ் கனகராஜ் இருக்கு மடோன் அஸ்வின் காட்டியிருக்கிறார்.அதைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று கூறி சென்றுவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

இரண்டு நாட்களாகவும் அவர் பார்த்த அந்த காட்சி மனதில் நின்றதனால் மீண்டும் மடோன் அஸ்வினுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். நான் பார்த்த அந்த காட்சியை இடைவெளியின் போது வை என்று கூறினார். அதற்கு அவர் இல்லை நான் இந்த காட்சியை இடைவெளிக்கு பிறகு தான் வைத்திருக்கிறேன்.இடைவெளியில் வைப்பது அவ்வளவு சரியல்ல என்று கூறி வைக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

பெரும்பாலும் இடைவெளியில் இடம்பெறும் காட்சிகள் சுவாரஸ்யமான காட்சிகளாக தான் இருக்கும். அவர் பார்த்த ஒரு காட்சியை எவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்தது என்றால் மொத்த திரைப்படமும் எப்படி இருக்க போகிறது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெருகி வருகிறது.

Most Popular