கடந்த மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்ட மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் இத்திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு தான் பெற்று வருகிறது.
திரைப்பட வெளியிடுவதற்கு முன்பு இத்திரைப்படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அது திரைப்படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் உலகநாயகன் கமலஹாசன் முன்னிலையில் தேவர் மகன் திரைப்படத்தை குறை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் எனக்கு தேவர் மகன் திரைப்படத்தில் பெரும் எதிர்ப்பு இருக்கிறது என்றும் அதனுடைய தாக்கத்தில் தான் நான் பரியேறும் பெருமாள், கர்ணன், தற்பொழுது மாமன்னர் என்று இயக்கி இருக்கிறேன் என்று அவர் கூறியது சாதாரண மனிதனில் இருந்து அவருடைய சினிமா துறையிலேயே அவருக்கு எதிர்ப்புகள் தொடங்கி விட்டது.
அதனுடைய விளைவாகத்தான் பல இயக்குனர்களும் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் இதை கண்டித்தும் விமர்சித்தும் வருகிறார்கள். தற்பொழுது கோயம்புத்தூரில் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினரான திருப்பூர் சுப்ரமணியம் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் .
திரைப்படங்கள் என்பது மக்களின் பொழுது போக்காகு என்றும் இதில் ஏன் ஜாதி குறி வைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். நான் மேல் சாதிக்காரன் நீ கீழ் ஜாதிக்காரன் என்றெல்லாம் எதுவுமே கிடையாது. அனைவருமே மனித ஜாதிகள் தான் நான் திரைப்பட வாழ்விற்கு வந்து 45 வருடங்கள் ஆகிறது.
இதுவரை நான் ஜாதியை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படங்களை பார்த்ததில்லை. சில நாட்களாக தான் இவை அதிகமாக பரவி வருகிறது என்று மாமன்னன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இப்படி கூறியிருக்கிறார் என்பதை எல்லாம் மையப்படுத்தாமல் பொதுவாக கூறுவது போல் கூறி இருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.
படித்தவர்கள் ஆகிய நாம் எதற்காக நான் தாழ்த்தப்பட்டவன் என்று தானே ஒப்புக்கொள்ள வேண்டும். இங்கு அப்படி யாருமே கிடையாது. அனைவரும் சமம் தான் என்ற கருத்தினை கூறியிருக்கிறார்.திருப்பூர் சுப்ரமணியம் மேலும் ஒரு நல்ல சினிமாவிற்கு மக்களை மகிழ்விக்கும் பொழுது போக்காக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.