தமிழ் சினிமாவில் விஜய் அஜித்துக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட நடிகராக சிவகார்த்திகேயன் விளங்குகிறார். தொலைக்காட்சியில் தொடங்கி தற்போது திரையுலகம் வரை சிவகார்த்திகேயன் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் வரும் 14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கான முன்பதிவு நான்கு நாட்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த அளவைவிட முன்பதிவு மிகவும் மோசமாக நடைபெற்று வருவது படக் குழுவினரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. பொதுவாக டாப் ஹீரோ படங்கள் என்றால் முதல் நாளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும்.
ஆனால் மாவீரன் திரைப்படத்திற்கு பல்வேறு திரையரங்குகளில் முதல் காட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு டிக்கெட்டுகள் தான் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.இது பட தயாரிப்பாளர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
மேலும் திரையரங்கு உரிமையாளர்களும் மாவீரன் படத்தை நம்பி இருந்தனர். அவர்களுக்கும் இது கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் முந்தைய திரைப்படமான பிரின்ஸ் மோசமான தோல்வியை பெற்றது.
இதன் தாக்கம் காரணமாக தான் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் மாவீரன் திரைப்படத்தில் எந்தப் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.
அனிருத் சிவகார்த்திகேயன் இணையும் போது ஏதேனும் ஒரு பாடல் ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் பேசப்படும். அதன் மூலம் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள். ஆனால் அப்படி எந்த ஒரு மாயாஜாலமும் மாவீரன் படத்தில் நடைபெறவில்லை.
எனினும் படத்திற்கு பெரிய அளவில் ஓப்பனிங் இல்லை என்றாலும் விமர்சனம் சிறப்பாக இருந்தால் மக்கள் கூட்டம் திரையரங்குகளுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் காட்சியில் பணம் சூப்பராக இருக்கிறது என்று விமர்சனம் வந்தாலே அடுத்தடுத்த காட்சிகள் எல்லாம் குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளை ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள் என்று தயாரிப்பாளர் தரப்பு நம்புகிறது.