Saturday, April 5, 2025
- Advertisement -
Homeசினிமா72 வயதில் பம்பரம் போல் சுற்றும் ரஜினி.. லால் சலாம் கேக் வெட்டி கொண்டாட்டம்.. எதுக்கு...

72 வயதில் பம்பரம் போல் சுற்றும் ரஜினி.. லால் சலாம் கேக் வெட்டி கொண்டாட்டம்.. எதுக்கு தெரியுமா?

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72 வயதிலும் பம்பரம் போல் சுழன்று வருகிறார். நம் வீட்டிலோ நம் வீட்டில் அருகிலோ 70 வயது உடைய முதியவர் எழுந்து நின்று தங்களுடைய பணிகளை செய்து கொள்ளவே சிரமப்படுவார்கள்.

- Advertisement -

ஏன் முதலில் 70 வயது வரை நம்மால் இருக்க முடியுமா என்று கூட தெரியாது. ஆனால் நடிகர் ரஜினியும் கமலும் தங்களது வயதையும் பொருட்படுத்தாமல் இளம் நடிகர்களுக்கு போட்டி போடும் வகையில் தங்களது பணியை செய்து வருகிறார்கள்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதிலும் சினிமா உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவருடைய படங்களின் வசூல் குறைந்தாலும் இன்றும் இளம் நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.

- Advertisement -

நடிகர் ரஜினி வயசில் உள்ள மற்ற நடிகர்கள் எல்லாம் ஃபீல் டவுட் ஆன நிலையில் ரஜினி இன்னும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த ரஜினி உடனே தன்னுடைய மகளின் லால் சலாம் படத்திற்கு சென்றார்.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி ,டெல்லி, மும்பை என பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினி பங்கு பெற்று ஷூட்டிங்கை முடித்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினியின் லால் சலாம் போர்ஷன் முடிந்துவிட்டது. இதனை அடுத்து பட குழு கேக் வெட்டி அவருக்கு பிரியா விடை அளித்தார்கள்.

நடிகர் ரஜினியின் மகள் அவருக்கு கேக் ஊட்டி விட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நடிகர் ரஜினி இந்த படம் முடிந்தவுடன் ஓய்வு ஏதும் எடுக்காமல் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிவு அடைந்த நிலையில் ஷூட்டிங் இன்னும் ஒரு இரு வாரத்தில் நடக்க உள்ளது. அதுவரை ரஜினி வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க உள்ளார். நடிகர் ரஜினி, கமல் போன்றோரெல்லாம் வயதாகியும் பம்பரம் போல் சுழற்வது நமக்கு எல்லாம் ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.

Most Popular