சினிமாவில் சாகசங்களுக்கு மிகவும் பிரபலமானவர் டாம் க்ரூஸ். இவரின் மிஷன் இம்பாசிபில் படங்களில் வரும் சாகசக் காட்சிகள் பார்ப்போர்களின் வயிற்றைக் கலக்கிவடும். அந்த சீரிஸில் ஏழாவது திரைப்படம் மற்ற 6 படங்களை விட சிறந்ததாக தயாராகியுள்ளது என தரமான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
மிஷன் இம்பாசிபில் மேலோட்டம்
இந்த திரைப்பட சீரிஸின் முதல் பாகம் 1996ஆம் ஆண்டு வெளியானது. முதல் 4 படங்களை வெவ்வேறு இயக்குனர்களும் கடைசி 2 படங்களை கிறிஸ்டோபர் மெக்வரினும் இயக்கினர். ஐ.எம்.எப் ஏஜென்சி மூலம் ஈத்தன் ஹன்ட்டாக வரும் டாம் க்ரூஸ் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு பெரிய ரிஸ்க்கான மிஷனில் களமிறங்கி அதைச் சிறப்பாக நிறைவு செய்வர். ஒவ்வொரு பாகத்திலும் கதை வெவ்வேறாக வரும்.
கடைசி 2 படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்வரின் 7வது மற்றும் 8வது பாகத்தையும் இயக்குகிறார். இந்த சீரிசில் முதல் மூன்று பாகங்கள் வெவ்வேறு கதை, அதனைத் தொடர்ந்து வரும் அடுத்த 3 பாகங்கள் முந்தைய படங்களின் தொடர்பைக் கொண்டவை ஆகும். மிஷன் இம்பாசிபில் 6 படத்தின் தொடர்ச்சியே 7வது திரைப்படம்.
மிஷன் இம்பாசிபில் 7 கதைக்களம்
‘ தி என்டிட்டி ’ எனும் உலகை அழிக்கும் கருவியை தடுத்து நிறுத்துவதே இந்தப் பாகத்தில் டாம் க்ரூஸ் & கோவின் மிஷன். அந்தக் கருவியின் 2வது சாவியைக் கண்டுபிடிக்கும் போராட்டதையே படம் முழுக்க காட்டியுள்ளனர்.
படத்தின் பிளஸ் & மைனஸ்
டாம் க்ரூஸ், ரெபேக்கா, சைமன், விங் ரேம்ஸ் என ஈத்தன் ஹன்ட்டின் குழு வழக்கம் போல சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர்த்து எதிராகியாக வரும் ஹெலி அட்வெல் மற்றும் பாம் க்ளென்டிஃப் நடிப்பில் மிரட்டியுள்ளனர்.
டிரைலரில் காட்டப்பட்ட மலை ஸ்டண்ட் மற்றும் இரண்டாவது பாதியில் வரும் ரயில் ஸ்டண்ட் பிரம்மிக்கவைத்துள்ளது. சிறந்த ஹாலிவுட் ஆக்க்ஷன் படம் எனும் பெயரை மிஷன் இம்பாசிபில் பெற்றுவிடில் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
இந்தப் படம் ‘ டெத் ரெக்கனிங் 1 ’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்தில் மீதி தொடரும். அதனால் படத்தின் முடிவை சுவாரசியமாக ரசிகர்களை வியக்கவைக்கும் விதமாக முடிதிருக்கலாம். மேலும் 2வது பாதி சற்று இழுக்கபட்டதாக தோன்றியது.
மொத்தத்தில் தரமான ஆக்க்ஷன் திரைப்படத்தை படக்குழு வழங்கியுள்ளனர். மேலும் இந்தப் படத்தைக் காண அனைத்து பாகங்களையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கடைசி 3 படங்கள் பார்த்தாலே போதும்.