Thursday, July 10, 2025
- Advertisement -
Homeசினிமாமெட்டி ஒலியில் நடித்ததற்கு ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? போஸ் வெங்கட் பேச்சு

மெட்டி ஒலியில் நடித்ததற்கு ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? போஸ் வெங்கட் பேச்சு

ஆட்டோ ஓட்டிக்கொண்டு கடின உழைப்பு மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரை வரை சென்றவர் நடிகர் போஸ் வெங்கட். மெட்டி ஒலி தொடரில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பிறகு சிவாஜி கவன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

- Advertisement -

பல்வேறு திரைப்படங்களில் தற்போது முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் தான் மெட்டிஒலி கதாபாத்திரம் நடித்ததின் மூலம் தான் பிரபலமானேம்.

முதலில் நான் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பேன். ஆனால் மெட்டி ஒலி கதாபாத்திரத்தில் நடித்த போது எனக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் தான் சம்பளம் கொடுத்தார்கள். மாதத்திற்கு 10 முதல் 15 நாட்கள் ஷூட்டிங் இருக்கும்.

- Advertisement -

ஆட்டோ ஒட்டியதில் கிடைத்ததை விட சீரியலில் எனக்கு முதலில் குறைவாக தான் கிடைத்தது. அதன் பிறகு என்னுடைய கதாபாத்திரம் பிரபலமான உடன் 500 ரூபாயை ஆயிரம் ரூபாய் வரை ஏற்றினார்கள். தற்போது அது படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு நாளைக்கு 50,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளமாக திரைப்படத்தில் தருகிறார்கள்.

- Advertisement -

இதுவே கொஞ்சம் நிறைய நாட்கள் சூட்டிங் இருந்தால் ஒரு சம்பளமாக பெரிய தொகையை கொடுத்து விடுவார்கள். முதலில் நான் ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால் என் காதலை அவரிடம் சொல்லாமல் அவர் தந்தையிடம் நட்பாக பழகினேன்.

பிறகு அவருடைய தந்தைக்கு என்னுடைய காதல் குறித்து தெரிந்தது. ஆனால் அவர் என்னை அழைத்து என் பெண்ணை நீ காதலிப்பது எனக்கு செய்யும் துரோகம் இல்லையா என கேட்டார். அது என் மனதை மிகவும் பாதித்தது. அதிலிருந்து அந்த பெண்ணை நான் மறந்து பஸ் ஏறி நேராக சென்னை வந்து விட்டேன்.

கவன் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று பலமுறை நான் கூறியிருக்கிறேன்
கே வி ஆனந்த் எனக்கு மூன்று கதாபாத்திரத்தை வழங்கி உனக்கு எது பிடித்திருக்கிறது என்று தேர்வு செய்து கொள் என்று கூறினார்.

அவர் அனுப்பிய மூன்று பேரின் கதாபாத்திரத்திலும் வழுக்கை தலையாக இருந்தது. உடனே நான் என் மண்டையை ஷேவிங் செய்து கொண்டு நேராக வேஷ்டி சட்டை கட்டிக்கொண்டு கேவி ஆனந்தை பார்க்க சென்று விட்டேன். அதில் அனைவரும் இம்ப்ரஸ் ஆகி எனக்கு அந்த கதாபாத்திரத்தை வழங்கினார்கள் என்று போஸ் வெங்கட் கூறினார்.

Most Popular