பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் ஸ்டார் நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் பிரபாஸ். எனினும் அவர் கடைசியாக நடித்த மூன்று படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு அவர் நடித்த சாகோ, ராதே சியாம் மற்றும் ஆதிபுரூஸ் ஆகிய மூன்று திரைப்படமே எதிர்பார்த்த வெற்றியை பிரபாஸுக்கு தரவில்லை.
இதனால் மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பிரபாஸ் வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி சலார் திரைப்படத்தில் மிகவும் நம்பி இருக்கிறார். கே ஜி எஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நில் இந்த படத்தையும் ஏக்கிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த படத்திற்கான ஷூட்டிங் ஏற்கனவே முடிவெடுத்த நிலையில் பிரபாஸ் தற்போது அடுத்த படத்தின் பணியை தொடங்கி விட்டார். இதில் மகா நடிகை போன்ற படங்களை இயக்கிய நாக அஸ்வின் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது கமல்ஹாசனும் அமிதாப்பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பதுதான். குறிப்பாக கமல்ஹாசன் பிரபாஸ்க்கு வில்லனாக நடிக்கிறாராம்.
இது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் தொடர்பான பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பிரபாஸ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
போர்வீரன் மற்றும் ரோபோ கலந்த மாதிரி ஒரு லுக்கில் நடித்திருக்கும் பிரபாஸ் முகத்தில் அதிக தாடி வைத்திருக்கிறார். மேலும் தலையில் முடியும் அதிகமாக வைத்து வித்தியாசம் இருக்கிறார். எனினும் இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் எந்த வரவேற்பையும் பெறவில்லை.
இதில் பிரபாஸ் நன்றாக இல்லை என்றும் அயர்ன் மேன் படத்தில் வரும் ஸ்டில்லை காப்பி அடித்தது போல் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஆதிபுருஷ் திரைப்படமும் டீசர் ட்ரைலரில் ஒட்டுமொத்த படத்தையும் காலி செய்த நிலையில் ப்ராஜெக்ட் திரைப்படமும் அதே பாணியில் இருக்குமா என்ற கலக்கம் ரசிகர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.