நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் நல்ல அளவில் இருந்தது. எனினும் வார நாட்களில் படத்தின் வசூல் குறைந்தது. எனினும் சிவகார்த்திகேயனின் பிரண்ட்ஸ் திரைப்படத்தை மாவீரன் முந்தியது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அதிக வசூலை பெற்ற திரைப்படமான டான் வசூலை மாவீரன் தாண்டுமா என எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் டான் 85 கோடி ரூபாய் வசூலை செய்தது. இதனை மாவீரன் முறியடிக்க வாய்ப்பு குறைவு என பேசப்பட்டது. அதற்கு தகுந்தார் போல் இந்த வாரம் வெள்ளிக்கிழமை இரண்டு புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது.
விஜய் ஆண்டனியின் கொலை மற்றும் அர்ஜுன் தாஸின் அநீதி ஆகிய திரைப்படங்கள் வந்தன. விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் ஹிட் கொடுத்ததால் இந்த படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தரும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. இதன் காரணமாக விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இது மாவீரன் படத்திற்கு அடிச்ச லக்காக பார்க்கப்படுகிறது. இதனால் மக்களின் விருப்பம் மாவீரன் திரைப்படமாகவே இருக்கிறது.
இதன் மூலம் பலரும் மாவீரன் படத்தையே பார்க்க திரையரங்குகளுக்கு வருகிறார்கள்.
இதன் காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மீண்டும் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக மாவீரன் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 100 கோடி ரூபாய் வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூலை மாவீரன் தாண்டி இருப்பதாக தெரிகிறது சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.