கிரிக்கெட்டின் தல என்றழைக்கப்படும் எம்.எஸ்.தோனி சர்வதேச ஓய்வுக்குப் பின் சினிமாவில் களமிறங்கியுள்ளார். தோனி தயாரிப்பு நிறுவனத்துக்கு கீழ் தன் முதல் படத்தை கோலிவுட்டில் இருந்து துவங்கியுள்ளார். ஹரிஷ் கல்யான், இவானா ஜோடியில் தயாராகியுள்ள ‘ லெட்ஸ் கெட் மேரிட் ’ சுருக்கமாக எல்.ஜி.எம் எனும் படம் தான் அது.
ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இப்படத்தில் நதியா, யோகி பாபா, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். காதல் டிராமா வகையில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. அதற்கான புரொமோஷன்கள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
எல்.ஜி.எம் இசை வெளியீட்டு விழாவில் தோனி
அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் மற்றும் தன் மனைவியான ஷாக்ஷியுடன் கலந்து கொண்டார் தோனி. அப்போது யோகி பாபுவேடன் மிகவும் நெருக்கமாகினார். கேக் வெட்டும் போது யோகி பாபுவுக்கு ஊட்டாமால் தோனி தானே எடுத்து சாப்பிட, யோகி பாபு ஏமாற்ற பார்வையோடு தோனியுடன் இணைந்த சிரித்து கியூட்டான தருணத்தை உருவாக்கினர். இப்படத்தில் நடித்தால் தோனி ஆட்டோகிராஃப் கொண்ட பேட் கிடைக்கும் என்பதால் தான் நடித்தேன் என்றும் யோகி பாபு தெரிவித்தார்.
மேடையில் பேசிய தோனி, “ யோகி பாபு தன்னிடம் சி.எஸ்.கே அணியில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டதாகவும் ராயுடு ஓய்வு பெற்றதால் ஒரு இடம் இருக்கிறது வாருங்கள். ” என நகைச்சுவையாக கூறினார். மேலும், “ அணியில் எல்லோரும் வேகமாக பந்து வீசுவார்கள் உங்களை காயப்படுதவே நினைப்பார்கள் அதற்கு நீங்கள் ஜாக்கர்தியாக இருக்க வேண்டும். இது குறித்து நான் அணி நிர்வாகத்திடம் பேசுவேன் ஆனால் நீங்களோ படத்தில் நடிப்பதில் பிஸியாக இருக்கிறீர்கள். ” என சிரித்துக் கொண்டே சொன்னார்.
தன் திறனை வெளிக்காட்டிய யோகி பாபி
யோகி பாபு கேட்டதும் அதற்கு தோனி பதிலத்ததும் நகைச்சுவை என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் தற்போது சமூக வலைத்தளத்தில் யோகி பாபுவின் பேட்டிங் வைரல் ஆகியுள்ளது. யோகி பாபு சும்மா ஒன்னும் சி.எஸ்.கே அணியில் சேர்த்துக் கொள்ள கேட்கவில்லை என பதிவிட்டு நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
எல்.ஜி.எம் படத்தில் தோனி ?
சென்னை அணியில் சேர்ந்த போதே தமிழ்நாடு தன்னை தத்து எடுத்துவிட்டதால் தான் தன் முதல் படத்தை தமிழில் துவங்கியுள்ளதாக தோனியே கூறினார். மேலும் இந்தப் படத்தில் அவர் கவுர தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்னும் உறுதி செய்யவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.