Friday, November 1, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் அதே தவறு செய்யும் நெல்சன்.. ஜெய்லர் இவ்வளவு பெரிய படமா?

மீண்டும் அதே தவறு செய்யும் நெல்சன்.. ஜெய்லர் இவ்வளவு பெரிய படமா?

ஒரு காலத்தில் சினிமா என்றால் திரையரங்குக்கு சென்று மூன்று மணி நேரம் படம் பார்க்க போகிறோம் என்று ரசிகர்கள் தங்களுக்குள்ளே செட் செய்து கொள்வார்கள். ஆனால் தற்போது எல்லாம் படம் இரண்டு மணி நேரம் அல்லது 2 மணி 20 நிமிடம் வரை இருந்தால் மட்டுமே ரசிகர்கள் அதனை ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

- Advertisement -

பலரும் தற்போது மூன்று மணி நேரத்தை திரையரங்கில் செலவிட தயக்கம் காட்டி வருகிறார்கள். படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை ஜெட் வேகத்தில் செல்ல வேண்டும் என்றும் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். சில காட்சிகள் கலைநயத்துடன் இருந்தால் படம் போர் அடித்து விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் பெரும்பாலும் இளம் இயக்குனர்கள் திரைப்படங்களை இரண்டு மணி நேரம் அல்லது இரண்டு மணி 20 நிமிடம் வரை எடுத்து முடித்து விடுகிறார்கள்.
இதைத் தாண்டினால் படத்தை பார்ப்பதற்கு முன்பாகவே இந்த படம் நன்றாக இருக்காது என முடிவு செய்து விடுகிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது ஜெயிலர் படத்தின் கால நேரம் வெளிவந்திருக்கிறது
இதில் ஜெய்லர் படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் ஒரு மணி நேரம் 19 நிமிடம் வரை தான் ஓடும். இடைவேளைக்கு பிறகு ஒரு மணி நேரம் முப்பது நிமிடம் படம் ஓடும் அளவுக்கு நெல்சன் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

பொதுவாக ஒரு படம் ஃபர்ஸ்ட் ஆஃப் விட சைண்ட் ஆஃப் தான் சின்னதாகவும் விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். செகண்ட் ஆப் விறுவிறுப்பாக இருந்தால் அந்தப் படம் மிகப்பெரிய ஹிட் அடையும்.

அதுவே ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக இருந்து செகண்ட் ஆஃப் சரியாக இல்லை என்றால் அந்த படம் சரியாக ஓடாது. இந்த நிலையில் பீஸ்ட் போன்ற திரைப்படங்களும் இதே கதையை தான் பெற்றது. தற்போது ஜெயிலர் திரைப்படத்தையும் நெல்சன் அதே வகையில் எடுத்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதி விரைவாக முடிந்து விடும். ஆனால் இரண்டாவது பாதி ஒன்றரை மணி நேரம் என்பதால் கொஞ்சம் ஜவ்வு போல் இழுக்க வாய்ப்பு இருக்கிறது.திரைக்கதைகளும் நடிகர் ரஜினியின் வசீகரத்திலும் ஜெய்லர் படத்தை காப்பாற்றும் என எதிர்பார்க்கலாம்.

Most Popular