நடிகர் சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய பட குழு முடிவு எடுத்துள்ளது.
மேலும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்திலும் உருவாக இருக்கிறது. இந்த படம் பண்டைய காலத்தில் எடுக்கப்படும் போர்வீரர்கள் தொடர்பான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஸ்டூடியோ கிரின்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஜெயன் அளித்த ஒரு பேட்டி கங்குவா திரைப்படத்தை டோட்டல் டேமேஜ் ஆகிவிட்டது. பேட்டி ஒன்றில் பேசிய அவர் கங்குவா படத்தை நாங்கள் ஜப்பான், தாய்லாந்து மொழிகளிலும் சீன மொழிகளிலும் டப் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.
இதன் மூலம் சூர்யா தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கிறோம். இந்த படத்தில் பழைய வரலாற்று காட்சிகள் மட்டும் கிடையாது. அது இந்த படத்தின் ஒரு பகுதி தான். இந்தப் படம் கோவாவில் நடைபெறும்.
இதில் சூர்யா, திசா பதானி போன்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். கோவாவில் நிகழ் கால கதையும் பிறகு வரலாற்று கதையும் படத்தில் வரும் என்று தனஜெயன் கூறியுள்ளார். மேலும் கிராபிக்ஸ் காட்சிக்காக இரவு பகலுமாக வேலை நடந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள தனஞ்செய்யன், சிவா திரை கதையை செதுக்கியிருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில் கங்குவா திரைப்படம் குறித்து தனஜெயன் அளித்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படம் மீது சூர்யா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் தற்போது அவர் படத்தின் கதையை சொல்லிவிட்டார்.
கோவாவில் படம் நடைபெறும் என்றும் பிறகு வரலாற்று காட்சிகள் நடைபெறும் என்றும் கூறிவிட்டதால் மகதீரா, காஷ்மோரா,சீமா ராஜா போன்ற படங்களில் கதை போல இருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். படத்தின் கதையை முன்பே ஏன் தனஞ்செயன் கூறினார் என்றும் பலரும் சாடி வருகின்றனர்.